« December 2008 | Main | February 2009 »

January 30, 2009

தீக்குளிப்பை முன்னுதாரணமாக காட்டக்கூடாது என்கிறது தினமணி

"முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே நியாயமானவை. அவரது நான்கு பக்க வாக்குமூலம் அற்புதமான ஒன்று. சந்தேகமே இல்லை. அதற்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அவரது முட்டாள்தனம் பகுத்தறிவுள்ள யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு "தியாகம்" என்கிற முலாம் பூசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் நமது அரசியல்வாதிகள் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி," இவ்வாறு தமிழக நாளேடு தினமணி ஜனவரி 31ஆம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

MKTC0130.jpg

[முத்துக்குமாரின் தந்தையிடம் துக்கம் விசாரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ்-படம்: புதினம்.கொம்]

"இது தொடரக் கூடாது" என்ற தலைப்பிலான இவ் ஆசிரியத் தலையங்கம் வருமாறு:

MK0130A.jpgத்திரிகையாளர் முத்துக்குமார் தீக்குளித்து இறந்த சம்பவம் மனிதாபிமானமும் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறையுமுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கிறது. இலங்கைப் பிரச்னையில் ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு தீக்குளித்து இறப்பதுதான் வழி என்கிற அளவுக்கு முத்துக்குமாரைப் போன்ற இளைஞர்களிடையில் விரக்தி ஏற்படுத்தும் அளவுக்கு ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இந்தப் பிரச்னையில் நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம் என்கிற நம்பிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாமல் போனது துரதிர்ஷ்டமே.

அதேநேரத்தில், தீக்குளிப்பது, உயிரை மாய்த்துக் கொள்வது, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது, இன்னும் ஒரு படி மேலே போய் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது என்று உணர்ச்சிக்கு வடிகால் தேடுவதை மக்களாட்சியில் நம்பிக்கையுடைய எவருமே ஏற்றுக்கொள்ள முடியாது. முத்துக்குமாரின் மரணம், அவர் மீது அனுதாப உணர்வைத் தூண்டுமே தவிர இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு கண்டுவிடுமா என்ன? பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் முல்லைத்தீவில் மிருகங்களைப்போல அலைந்துகொண்டிருப்பதைப் பற்றியே கவலைப்படாத இலங்கை அரசு, முத்துக்குமார் தீக்குளித்துவிட்டார் என்பதற்காக தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவா போகிறது?

பொறுப்புள்ள பத்திரிகையாளராக முத்துக்குமார் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஏனைய இளைஞர்களுக்கும் தவறான முன்னுதாரணத்தை அல்லவா காட்டியிருக்கிறார். ஒற்றுமையுடன் பிரச்னைகளுக்காகப் போராடாதவர்கள் என்ற ஏளனக் குரலுக்கு இதுநாள் வரை உள்ளாகியிருந்த தமிழகம், இப்போது துணிவுடன் போராடத் தெரியாத கோழைகளின் பூமி என்கிற அவமானத்தையும் அல்லவா சுமக்க நேரிடுகிறது.

தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் சமுதாயத்தின் கவனத்தை ஈர்ப்பது என்கிற நோய், 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்தான் அறிமுகமானது. அப்படி இறந்தவர்களுக்கு மொழிப்போர் தியாகிகள் என்று கௌரவம் வழங்கப்பட்டது முதல் தீக்குளித்து இறப்பது பெரிய தியாகம் என்பதுபோலவும், ஆட்சியாளர்களுக்கு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இதுதான் சரியான வழி என்பதுபோலவும் ஒரு தவறான கண்ணோட்டத்தை இளைஞர்கள் மத்தியில் அது ஏற்படுத்தியது.

சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர்கள் அடக்குமுறை ஆட்சியாளர்களின் பெருங்கொடுமைச் சிறையையும், தடியடியையும், துப்பாக்கிக் குண்டுகளையும் எதிர்கொண்டு போராடினார்களே தவிர, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அதற்குப் பெயர்தான் தியாகமே தவிர, ஒருங்கிணைந்து போராடுவதற்குப் பதிலாக உயிரை மாய்த்துக்கொண்டு இறப்பதற்குப் பெயரா தியாகம்?

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களை மட்டும் தியாகிகளாகக் கருதாமல், தீக்குளித்து இறந்தவர்களையும் தியாகிகளாக வர்ணித்ததன் விளைவுதான் இன்றுவரை உணர்ச்சிவசப்படும் இளைஞர்கள் தீக்குளிப்பதை ஏதோ வீரதீர சாகசம் என்று நினைத்துச் செயல்படுகின்றனர்.

எல்லா திராவிட பாரம்பரியக் கட்சிகளுமே வெவ்வேறு கட்டங்களில் இதுபோன்ற தீக்குளிப்புகளை ஆதரித்தன என்பதுதான் கசப்பான உண்மை. இப்படித் தீக்குளித்து இறப்பவர்களின் குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுப்பது என்கிற கலாசாரமும் தொடங்கப்பட்ட பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் தீக்குளிப்பதன் மூலம் தங்களது குடும்பத்தின் வறுமையைப் போக்க முயன்ற சம்பவங்களும் உண்டு.

அதைவிட உண்மை, நமது தலைவர்களும் சரி, தங்களுக்காக இன்னின்னார் தீக்குளித்தார்கள் என்கிற செய்தி வெளிவருவதை விரும்புகிறார்கள் என்பதுதான். தீக்குளித்து இறப்பவர்களிடம் எங்களுக்கு அனுதாபம் கிடையாது என்று மனதைக் கல்லாக்கிக் கொண்டு நமது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் திட்டவட்டமாகச் சொன்னால் ஒழிய இந்த முட்டாள்தனமான கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட மாட்டாது.

முத்துக்குமார் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்துமே நியாயமானவை. அவரது நான்கு பக்க வாக்குமூலம் அற்புதமான ஒன்று. சந்தேகமே இல்லை. அதற்காக தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அவரது முட்டாள்தனம் பகுத்தறிவுள்ள யாருக்கும் ஏற்புடையதல்ல. இதற்கு "தியாகம்" என்கிற முலாம் பூசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தாமல் இருப்பதுதான் நமது அரசியல்வாதிகள் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி.

இந்தத் தவறு முத்துக்குமாருடன் முடிந்துவிடட்டும். இனிமேலும் இது தொடரக்கூடாது!

January 29, 2009

சென்னையில் இளைஞன் தீக்குளித்து தற்கொலை

மிழ்நாட்டின் தலைநகரான சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்னால் இன்று வியாழக்கிழமை, ஜனவரி 29 ஆம் திகதி காலை முத்துக்குமார் எனும் இளைஞர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த இந்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தே இவர் தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளார். உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் இவரை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி இவர் மரணமானார்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் "பெண்ணே நீ" மாத இதழில் நிருபராக முத்துக்குமார் பணியாற்றி வந்தார். அதற்கு முன்பு தொலைக்காட்சி தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

சென்னை கொளத்தூர் மக்கான் தோட்டம் திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்த இவருக்கு வயது 30.

தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தமிழர்கள் குறித்து ஆர்வமாக பேசுவார்.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி உரையாடிக் கொள்வாராம்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படுவது முத்துக்குமாரின் மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அலுவலகத்துக்கு இன்று காலை 10:30 நிமிடமளவில் வந்த அவர் கையில் மண்ணெய் கலனை கொண்டு வந்து இருந்தார்.

ஈழத் தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும் அவர்களை காப்பாற்றக்கோரியும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கண்டித்து முழக்கமிட்டபடி மண்ணெயை தன் மீது ஊற்றினார். பிறகு தீயை பற்ற வைத்தார். உடல் முழுக்க தீ பற்றி எரிய அவர் சாஸ்திரி பவனுக்குள் அங்கும் இங்கும் அலறியபடி ஓடினார்.

திடீரென ஒரு வாலிபர் தீப்பிடித்த உடலுடன் ஓடுவதை கண்டதும் சாஸ்திரி பவன் வளாகத்தில் நின்றிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப்பகுதி முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் முத்துக்குமார் ஒரு இடத்தில் சாய்ந்து விழுந்தார்.

அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு கரிக்கட்டையாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டனர். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல்துறையினர் அவர் வைத்திருந்த பொருட்களை சோதனையிட்டனர். அப்போது 14 அம்ச கோரிக்கை அடங்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை முத்துக்குமார் வைத்திருப்பது தெரிந்தது.

அது தொடர்பான விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமார் உடல்நிலை மோசமானது.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் வைத்திருந்த துண்டுப்பிரசுரத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காலம் கடந்த நீதி, அநீதிக்கு சமமானது'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

முன்னதாக காவல்துறையினர் முத்துக்குமாரிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும்.

எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.

எனவே நான் கொளத்தூரில் உள்ள எனது சகோதரி தமிழரசியுடன் வசித்து வருகிறேன். இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும்.

மத்திய அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக்கொண்டேன்.

வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது.

அண்ணன் பிரபாகரனுக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். திருமாவளவனுக்கும் தகவல் கொடுங்கள். பிரபாகரன் கில்லாடி. எப்படியாவது நான் எரிந்து கொண்ட தகவலை தெரிந்து கொள்வார் என முத்துக்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் விநியோகித்த துண்டுப்பிரசுரம் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.

உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.

வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.

ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.

மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.

காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.

உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.

உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்’ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.

ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?

வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர் (they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது.

ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.

ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.

உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?

அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

இவ்வாறு அந்த துண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

January 27, 2009

காணொளி: "தி.மு.க மீதும் தலைவர் கருணாநிதி மீதும் வரலாறு குற்றம் சுமத்தும்"

"மிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தும்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை நிறுத்த முடியாமலும், இந்திய ராணுவத்தின் உதவிகளைத் தடைசெய்ய முடியாமல் விஷயத்தை தள்ளிப்போட்டதற்காகவும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவுக்குரல் கொடுத்தபோதும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் "உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்" என்று திமுக வினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியையும் வரலாறு குற்றம் சுமத்தும்," இவ்வாறு தமிழக நாளேடு தினமணி ஜனவரி 27ஆம் திகதி ஆசிரியத் தலையங்கம் தீட்டியுள்ளது.

"விதியின் சதியா ? மதியின் பிழையா ?" என்ற தலைப்பிலான ஆசிரியத் தலையங்கம் வருமாறு:

லங்கைப் போர் தானாகவே ஓயும் வரை பிரச்னையைக் காலதாமதம் செய்வதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய ராஜதந்திரம்தான்!

முல்லைத்தீவைத் தங்கள் ஆளுகைக்கு கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. தங்கள் வெற்றியைக் காட்டுவதற்காக பத்திரிகையாளர் குழுவை அழைத்துச் செல்லவும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து வருகிறது. தங்கள் நாட்டின் ஒரு பகுதியைத் தாங்களே மீட்டெடுத்து வெற்றிக்கொடி ஏற்றியுள்ள இன்றைய சூழலில், இலங்கை ராணுவம் தன் பீரங்கிகளுக்கு ஓய்வு கொடுப்பது இயல்பானது. இதைப் போர் நிறுத்தம் என்று சொல்ல முடியாது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பகுதிகளை இழந்தாலும்கூட அவர்கள் மீண்டும் கொரில்லா போரை நடத்தவே செய்வார்கள். ஆகையால் விடுதலைப் புலிகளைப் பொருத்தவரையில் இந்தப் போர் தொடரும். தமிழீழம் கேட்டு எப்போதும்போல அவர்கள் தாக்குதலை நடத்துவார்கள். ஆனால், அது இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்குமே தவிர, இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மீண்டும் மாறுமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.

கடந்த கால் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர்கள் போராடிப் போராடி ஓய்ந்து விட்டார்கள். மீண்டும் இலங்கை ராணுவத்தை எதிர்கொள்ளவும், விடுதலைப் புலிகளுக்குத் தேவையான ஆள் மற்றும் ஆயுதம் அளிக்கவும் அவர்களால் முடியுமா என்பதும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இத்தனை காலமாக விடுதலைப் புலிகளின் பகுதிகளை நெருங்க முடியாத இலங்கை ராணுவம், மிகக் குறுகிய காலத்தில் அதைச் செய்து முடித்ததற்கு முக்கியமான நான்கு காரணங்கள் உண்டு. இலங்கைத் தமிழர்களுக்கும் இலங்கையில் குடியேறிய தமிழர்களுக்கும் இடையே இருந்த விரிசலை மிகவும் பெரிதாக்கி, தனக்கு ஆதரவைத் தேடிக்கொண்டது இலங்கை அரசு. இரண்டாவதாக, கிழக்கு மாகாணத்தில் அரசியல் தீர்வுக்கு கர்னல் கருணாவை இணங்கும்படி செய்ததும் இலங்கை அரசுக்குப் பலமாக அமைந்துவிட்டது. உலக அளவிலான தீவிரவாதத்துக்கு எதிரான ஆதரவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது என்பது மூன்றாவது காரணம். நான்காவது முக்கியமான காரணம் இந்திய அரசு, இலங்கை அரசுக்குத் தந்த மறைமுக ஒத்துழைப்பு.

இருபத்தைந்து ஆண்டுகளாக நுழைய முடியாத வன்னி காடுகளுக்குள் இலங்கை ராணுவத்தால் நுழைய முடிகிறது என்றால் அது, பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கர்னல் கருணா தந்த தகவல்களின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

"வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு ஒரு கருணா" என்பதுதான் இலங்கைத் தமிழர்களுக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது.

[வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப் படத்திலிருந்து காட்சிகள்]

நாளைய தமிழர் வரலாற்றில், இலங்கைப் பிரச்னையில் ஏற்பட்ட பின்னடைவு பற்றிக் குறிப்பிடும் போது, நிச்சயமாக இந்த வரிகள் இடம்பெற்றால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை: "கருணா காட்டிக் கொடுத்தார்; கருணாநிதி கண்டும் காணாமல் இருந்தார்".

ஏனென்றால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்தும்கூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை நிறுத்த முடியாமலும், இந்திய ராணுவத்தின் உதவிகளைத் தடைசெய்ய முடியாமல் விஷயத்தை தள்ளிப்போட்டதற்காகவும், தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த ஆதரவுக்குரல் கொடுத்தபோதும் அதை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியதற்காகவும் "உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்" என்று திமுக வினரால் அழைக்கப்படும் தமிழக முதல்வர் கருணாநிதியையும் வரலாறு குற்றம் சுமத்தும்.

மத்திய அரசின் அரசியல் ஆய்வுக் குழுவில் ப. சிதம்பரம், டி.ஆர்.பாலு என்ற இரு தமிழர்கள் இடம்பெற்று இருப்பதால், மத்திய அரசு ஏன் தாமதித்தது அல்லது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்பதாக முதல்வர் கருணாநிதி சொல்லவே முடியாது.

முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் பிரதமரும் நானும் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம் என்று மக்களின் பரிதாபத்தைப் பெறவும் இயலாது.

தமிழ்ச் சாதி பற்றி மகாகவி பாரதியார் எழுப்பிய அதே கேள்விதான் இன்று நமக்கும் எழுகிறது:

"..........................லியின் வலியை
வெல்லல் ஆகாதென விளம்புகின்றனரால்.
நாசம் கூறும் "நாட்டு வைத்தியர்'
இவராம். இங்கு இவ் இருதலைக் கொள்ளியின்
இடையே நம்மவர் எப்படி உய்வர்?
விதியே! விதியே! தமிழ்ச் சாதியை
என்செயக் கருதி இருக்கின்றாயடா?''

January 26, 2009

இலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் பலியாகி வருகின்றனர் - ஐ.நா. தெரிவிப்பு

UN0126.jpgலங்கையில் தொடரும் மோதல்கள் காரணமாக பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுவருவதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று திங்கட்கிழமை, ஜனவரி 26ஆம் திகதி தெரிவித்துள்ளது.

வடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள சூழ்நிலையானது, பெரும் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் நீல் புஹ்ன் ஏ.பி. செய்திச் சேவைக்கு திங்கட்கிழமை அளித்த பேட்டியினை, கொழும்பின் முதன்மை தமிழ் நாளிதழ் வீரகேசரி பிரசுரித்துள்ளது:

அண்மைய வாரங்களாக அரசாங்கப் படையினர் வட பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, ஒரு சிறிய காட்டுப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் சிறைபடச் செய்துள்ளனர். புலிகள் பலம்பெற்று விளங்கிய இறுதிப் பிரதேசமான முல்லைத்தீவை இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாகவும், தொடர்ந்து திங்கட்கிழமை முழுவதும் காடுகளிலுள்ள புலிகளுடன் உக்கிர மோதல்களில் ஈடுபட்டதாகவும் இராணுவம் தெரிவித்தது.

போர் வலயம் சுருங்கியுள்ளதுடன், அப்பிரதேசத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் உள்ளனர். அண்மைக் காலமாக அங்கு நிலைமை மிக மோசமடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக பொதுமக்கள் பலர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர், இது உண்மையிலேயே தற்போது ஒரு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் காலம் வரை பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க மோதல்களில் ஈடுபடும் இரு தரப்பினருமே கடுமையாகப் பாடுபட்டனர். ஆனால், பெருமளவு மக்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெற்று வரும் தற்போதைய சூழ்நிலையில், இது தொடர்பில் மிக மிக கவனம் செலுத்தாது விடின் இழப்புகளைத் தவிர்க்க முடியாது போகும்.

அண்மைக் காலமாக வட பகுதியிலுள்ள பொது மக்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைக் குழுக்களும் இராஜதந்திரிகளும் கூடிய கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். பொதுமக்கள் போர் வலயத்திலிருந்து வெளியேறுவதிலிருந்து விடுதலைப் புலிகள் தடுப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

அரசாங்கமானது தன்னிச்சையாக புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிய பிராந்தியமொன்றைப் பாதுகாப்பு வலயமாக கடந்த வாரம் பிரகடனப்படுத்தியதுடன் பாதுகாப்பளிக்கப்பட்ட அப்பிரதேசத்திற்கு அனைத்து பொதுமக்களையும் செல்லுமாறு அழைப்பு விடுத்தது.

ஆனால், அப்பிராந்தியத்தில் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து அநேக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றன . அண்மைய நாட்களில் பாதுகாப்பு வலயத்தில் மோதல்கள் இடம்பெறுவது வழமையாக உள்ளது என்பதுடன் இதற்கு யார் பொறுப்பு என மதிப்பீடு செய்வது எமக்கு கஷ்டமாக உள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராணுவம் திரும்பத் திரும்ப மறுப்புத் தெரிவித்து வருகிறது நாங்கள் அந்த பாதுகாப்பு வலயத்தில் இலக்கு வைக்கவில்லை எனவும் புலிகள் தமது ஆயுதங்களுடன் பாதுகாப்பு வலயத்துக்குச் சென்று அங்கிருந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்று பிரிகேடியர் தெரிவித்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

January 25, 2009

விரும்பாத போரின் வேண்டாத நினைவுகள்

கேர்ணல் ஆர். ஹரிஹரன் (ஓய்வு)

"வர்தான் நமது மகனைக் கொன்ற ராணுவ அதிகாரி." என்று என்னை சுட்டிக்காட்டி தன்னுடைய மனைவிக்கு அந்த நடுத்தர வயது மனிதர் அறிமுகப்படுத்தினார். என்னுடன் இருந்த என் மனைவியோ அதிர்ச்சியடைந்தார். ஆனால் அந்த மனிதரின் வலியை அறிந்திருந்த நான், அமைதியாக இருந்தேன். 1989&ல் சென்னையில் என் வீட்டில் நடந்த சம்பவம் இது. அந்த தம்பதியினரை யாழ்ப்பாணத்தில் இருந்தபோது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகஸ்டு 5, 1987&ல் நான் இந்திய அமைதிப்படையின் சார்பாக யாழ்ப்பாணத்தின் செம்மண்ணில் காலடி வைத்தபோது, அவர்கள் வீட்டுக்குத்தான் முதலில் சென்றேன். அவருடைய 18 வயது மகனும் அங்கிருந்தான். அந்த அழகான இளைஞன் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்தில் அவர்களை 'பொடியன்கள்' என்று அழைப்பார்கள்.

RH0125A.jpg

[கேர்ணல் ஆர். ஹரிஹரன் - 2007 ஆகஸ்ட்டில், கொழும்பு கருத்தரங்கு ஒன்றில் ~ படப்பிடிப்பு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை]

சில மாதங்கள் கழித்து எதிர்பாராதவிதமாக புலிகளுடன் போர் தொடங்கியது. அந்தப் பொடியன் எங்கள் படையுடன் போரிட மன்னாருக்குச் சென்றுவிட்டதாக அறிந்தேன். எனவே நான் படையினரிடம் அந்த இளைஞனை உயிரோடு பிடியுங்கள்; சுட்டுவிடாதீர்கள் என்று கூறியிருந்தேன். "அவன் சயனைடு குப்பியைக் கடித்து இறந்துவிடலாம். அதற்கு இடம்கொடுக்காதீர்கள்" என்றும் எச்சரித்திருந்தேன். ஆனால் அது நடந்ததென்னவோ வேறு.

தாக்குதலின்போது நமது படையினர் அவனை அணுகுவதற்கு முன்பே, அவன் சயனைடு குப்பியைக் கடித்து இறந்துபோய்விட்டான். இச்சம்பவத்தை துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவனது தந்தையிடம் நான் எப்படி விவரிப்பது? இலங்கையில் ராணுவ உளவுப்பிரிவு தலைவராக மூன்று ஆண்டுகள் நான் இருந்தபோது, கண்ட நூற்றுக்கணக்கான சம்பவங்களில் அந்த இளைஞனின் மரணமும் ஒன்று. அவையெல்லாம் என்னை துயரடையச் செய்தன. ஒரு தமிழனான எனக்கு தொழில்ரீதியாக அங்கு பணிபுரிவது எளிதாக இருந்தது. ஆனால் போரில் அப்பாவித் தமிழர்கள் சாவதை தினமும் பார்ப்பது உளரீதியாக, பெரும் சித்திரவதையாக இருந்தது. அந்தத் துயரான அனுபவங்கள் எனக்குள் ஆழமான காயங்களை ஏற்படுத்தின. தமிழர்கள் பெரும்பான்மை சிங்களர்களுக்கு எதிராக தங்கள் உரிமைகளைப் பெற நடத்திவரும் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடுவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கைக்கு நான் இந்திய ராணுவத்துடன் சென்றது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம். அந்த காலகட்டத்தில் உளவுத்துறையில் இருந்த தமிழ் அதிகாரிகளில் நான்தான் சீனியர் என்பதால் அனுப்பப்பட்டேன். என்னுடைய உறவினர் சிலர் யாழ்ப்பாணத்திலும் கொழும்புவிலும் இருந்து வந்தவர்கள். எனவே தமிழர் பிரச்னையைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

இந்திய & இலங்கை ஒப்பந்தம் அவசரத்தில் உருவாக்கப்பட்டு, நீண்டகால குறிக்கோள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டது. அதற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. அவை:

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைக் காப்பது, அத்துடன் இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளை அந்நாட்டு ஒருமைப்பாட்டிற்கு கேடு நேராத வகையில் பெற்றுத்தருவது. இவை அரசியல்ரீதியான, ராஜதந்திரரீதியான குறிக்கோள்கள்.

அவற்றுக்கு ராணுவப் பின்னணி கிடையாது. இந்திய அமைதிப்படைக்கு எழுத்துமூலமாக எந்தவிதமான ஆணையும் அரசால் வழங்கப்படவில்லை. வந்த உத்தரவுகளும் வாய்வழியாகவே வந்தன. அவற்றில் சில உத்தரவுகள் நமது குறிக்கோள்களையும் மீறி இருந்தன. அதில் ஒன்று, இந்த ஒப்பந்தத்தை விரும்பாத சிங்களர்கள் மற்றும் இலங்கை ராணுவத்திடமிருந்து எதிர்ப்பு வந்தால் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனவைப் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பது!

ஆகஸ்டு 2, 1987&ல் சென்னைக்கு நான் வந்தபோது, தென்பிராந்திய கமாண்டர் லெப்டினெண்ட் ஜெனரல் தீபிந்தர் சிங், இந்தியப் படையினரோடு இலங்கை செல்வதற்கு தயாராக இருக்குமாறு என்னிடம் கூறினார். தமிழ்ப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற இந்தியப் படையினரின் உதவியை இலங்கை நாடியிருந்தது. "அங்கு நீங்கள் மூன்று நாட்களுக்கு இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

குறிப்பாக என்ன செய்யவேண்டும் என்ற விவரங்கள் எதுவும் வரவில்லை. மற்றவர்களைப் போலவே பிரபாகரனும் ஆயுதங்களை ஒப்படைப்பார் என்று நினைக்கிறேன்" என்று அவர் கூறினார். மூன்று நாள் கழித்து இரண்டே இரண்டு யூனிபார்ம்களுடன் நான் யாழ்ப்பாணம் போய்ச் சேர்ந்தேன். ஜெனரல் தீபிந்தர் சிங்கின் இரண்டு எதிர்பார்ப்புகளுமே பொய்த்துவிட்டன.

பிரபாகரன் ஒப்பந்தத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் சுதந்தர தமிழ் ஈழத்தை உருவாக்கும் குறிக்கோளையும் கைவிடவில்லை. நானோ இந்தியாவுக்குத் திரும்பிவர மூன்று ஆண்டுகளாகிவிட்டது. நாம் இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு இருந்த தயார்நிலையின் லட்சணம் இதுதான்!

முதல் இரண்டு மாதங்கள் அமைதியாக கழிந்தன. வடகிழக்கு மாகாணத்துக்கு அமைக்கப்பட்ட இடைக்கால நிர்வாகத்தை ஏற்றுக்கொள்வதிலும், ஆயுதங்களை ஒப்படைப்பதிலும் புலிகள் இழுபறி செய்துகொண்டிருந்தார்கள். அவர்களால் பிரச்னை உருவாகலாம் என நான் உணர்ந்தேன். நான் இலங்கையில் காலடி வைத்த உடனேயே, எங்கள் குடும்ப நண்பரும், ஜெயவர்த்தனவிடம் பணிபுரிந்திருந்தவருமான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜேந்திராவைச் சென்று சந்தித்தேன். அவர் என்னிடம் " ராஜீவ்காந்தி அரசியலில் ஒரு குழந்தை. மகாதந்திரசாலியான ஜெயவர்த்தன ராஜீவை தூக்கிச் சாப்பிட்டுவிடுவார். வரும் அக்டோபரில் உங்களை புலிகளை எதிர்த்து மோத வைப்பதுதான் அவரது திட்டம்" என்று எச்சரித்தார். இதை புது டெல்லிக்கும் நான் தெரிவித்திருந்தேன். தன்னுடைய கணிப்பு உண்மையாவதைப் பார்க்க ராஜேந்திரா உயிரோடு இல்லை. போர் தொடங்கிய முதல் வாரத்திலேயே தன் வீட்டுக்கு அருகில் வெடித்த குண்டுக்கு அவர் பலியாகிவிட்டார்.

புலிகளின் இளம் தலைவர்களில் ஒருவரான திலீபன் செப்டம்பர் 15, 1987&ல் "ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் இந்தியாவின் குறைபாடுகளை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடங்கியபோதுதான் பிரச்னை பெரிதானது. இந்தியாவுக்கு எதிரான கண்டனப் போராட்டங்களை புலிகள் யாழ்ப்பாணம் முழுக்க நடத்தினார்கள். புது டெல்லி இந்த சிக்கலைக் கண்டுகொள்ளவில்லை. இந்திய ராணுவத்திடமே இந்த அரசியல், ராஜதந்திரப் பிரச்னையைச் சமாளிக்கும் பொறுப்பை விட்டுவிட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடாத திலீபன், செப்டம்பர் 26, 1987&ல் மரணமடைந்தார். ஏற்கெனவே மோசமாகி வந்த எங்கள் உறவு மேலும் கசப்படைந்தது.

இந்நிலையில் நடந்த இன்னொரு முக்கியமான சம்பவத்தால் மேலும் இக்கட்டுகள் உருவாயின. அக்டோபர் 3, 1987 அன்று இலங்கை கடற்படை, புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 13 பேரை பருத்தித்துறை அருகே அவர்கள் தமிழகத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது நடுக்கடலில் கைதுசெய்தது. அந்த இரண்டு தலைவர்களும் ஆயுதம் வைத்திருந்தார்கள். பலாலியில் உள்ள இலங்கை ராணுவத் தலைமை முகாமில் அவர்கள் வைக்கப்பட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பல கிரிமினல் வழக்குகளில் விசாரிப்பதற்காக அவர்களைக் கொழும்புவுக்கு கொண்டு செல்லவேண்டும் என¢று ஜெயவர்த்தன விரும்பினார். (அனுராதபுரத்தில் 139 யாத்திரிகர்களைக் கொன்ற தாக்குதலில் புலேந்திரன் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்). அமைதியான சூழ்நிலையைப் பாதுகாக்க அவர்களை விடுதலை செய்துவிட ஜெயவர்த்தனவின் சம்மதத்தை இந்தியா கோரியது. ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை தான் சிங்களர்களிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்கான அரசியல் வாய்ப்பாக அவர் இதைப் பார்த்திருக்கலாம். எங்களுக்கு என்னவோ அவர் ஒருபோதும் அவர்களை உயிரோடு விடமாட்டார் என்றே தோன்றியது.

அக்டோபர் 5 அன்று இலங்கை ராணுவம் அவர்களை வலுக்கட்டாயமாக கொழும்புவுக்கு ஏற்றிச்செல்ல முடிவு செய்தது. அப்போது விமான தளத்தில் நான் இருந்தேன். இலங்கை ராணுவத்தின் யாழ்ப்பாண கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜெயரத்னே என்னோடு இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்றபோது பரிச்சயமானவர். அவர் இந்திய ராணுவத்திடம் போராளிகளை ஒப்படைத்துவிட கடைசிநேரத்திலும் கொழும்புவுடன் முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அது பலிக்கவில்லை. "அதிபர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களைக் கொழும்பு கொண்டு செல்லத்தான் வேண்டும்" என்று மனச்சோர்வுடன் கூறினார். என் அருகே இருந்த ஒரு இலங்கை ராணுவ அதிகாரி, "கடவுளே... திரும்பவும் போர் தொடங்கப்போகிறது'' என்றார்.

அப்போது போராளிகளை இலங்கைப்படையினர் இழுத்துக்கொண்டு வந்தபோது அவர்கள் சயனைடு குப்பிகளைக் கடித்ததைப் பார்த்தோம். முன்னதாக அவர்களை சந்தித்த மாத்தையா ரகசியமாக சயனைடு குப்பிகளைக் கொடுத்திருந்தார். வாயில் நுரைதள்ளி இறந்துகொண்டிருந்த அவர்களை ஆம்புலன்சில் ஏற்றியபோது கை, கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. இறந்து கொண்டிருந்தவர்களை சில படைவீரர்கள் கால்களால் உதைத்தனர். இந்தச் சம்பவம் என் வாழ்வின் துயரகரமான சம்பவங்களில் ஒன்று. இரண்டு தலைவர்களின் ஈகோக்களை திருப்திப்படுத்துவதற்காக தேவையில்லாமல் அவர்கள் இறந்தனர். இத்தனைக்கும் சமாதானம் நெருங்கிய காலகட்டம் அது! எனது சகாவான கேப்டன் சந்தோக் அந்த நேரத்தில் கண்ணீர்விட்டார். இந்த சம்பவத்தில் இந்தியா உறுதியாகச் செயல்பட்டிருந்தால் புலிகள் போரைத் தொடுக்கும் கட்டத்துக்குச் சென்றிருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மறுநாள் இலங்கைப் படையினர் 12 உடல்களை எங்களிடம் ஒப்படைத்தனர். (முதலுதவியால் மூன்று போராளிகள் பிழைத்திருந்தனர்.) உடல்களை பெற்றுச்செல்ல மூத்த புலித்தலைவர்களான மாத்தையாவும் யோகியும் வந்திருந்தனர். அச்சூழலில் இறுக்கம் நிலவியது. புலிகளின் சட்ட ஆலோசகரும் எனக்குத் தெரிந்தவருமான கோடீஸ்வரனும் வந்திருந்தார். இந்திய ராணுவத்தோடு போரில் இறங்கவேண்டாம் என்று பிரபாகரனிடம் ஆலோசனை கூறுமாறு அவரிடம் சொன்னேன். "தமிழர்களுக்கு எதிராக நாங்கள் போராட விரும்பவில்லை. நாங்கள் அவர்களுக்கு உதவி செய்யவே வந்தோம். எங்கள் ராணுவம் மிகப்பெரியது.

அடுத்த 20 ஆண்டுகளுக்கு நாங்கள் போராடமுடியும். நாகாலாந்தில் 30 ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருக்கிறோம். பிரபாகரனுக்கு இதை உணர்த்துங்கள்" என்றேன். "சார் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் தம்பியிடம் யார் சொல்வது?" என்றார் அவர் வருத்தத்தோடு. மாத்தையா முகத்தில் சலனமில்லை. "நீங்கள் இப்போது எங்களிடம் 12 போராளிகளின் உடல்களைக் கொடுக்கிறீர்கள். உங்களிடம் உங்கள் படையினரின் 1200 உடல்களை நாங்கள் கொடுப்போம்" என்றார் அவர். வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட உடல்கள், புலிகளின் வேனில் ஏற்றப்பட்டன. மாத்தையாவின் கணிப்பு பலித்தது. நாம் புலிகளோடு நடத்திய போரில் 1255 வீரர்களை இழந்தோம். ஆனால் அவரால் தன் சாவைத்தான் கணிக்க முடியவில்லை. 'ரா' உளவாளி என்று கருதி, பிற்காலத்தில் பிரபாகரன் தன்னைக் கொல்வார் என்று மாத்தையாவால் கணிக்க முடியாமல் போய்விட்டது! எனது நண்பரும் மென்மையாக பேசக்கூடியவருமான கோடீஸ்வரனும் அடையாளம் தெரியாத நபர்களால் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்ன ஒரு வேண்டாத இழப்பு!

மனித இனம் போரைப் போற்றியே வந்திருக்கிறது. இதிகாசங்களில் அவை பெருமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் மூன்று பெரிய போர்களையும் குறைந்தது 10 உள்ளூர் தீவிரவாதிகளுடனான போர்களையும், இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கையில் பார்த்திருக்கிறேன். உண்மையில் போர்கள் துயரமானவை. ஏனெனில் அவற்றில் மரணம் ஒவ்வொரு நாளும் நம்மைச் சந்திக்கிறது. ராணுவத்தில் நான் இருந்த 30 ஆண்டுகளில் எனக்குத் தெரிந்த எவ்வளவோ பேரை இழந்திருக்கிறேன். அவர்கள் பல ராணுவங்களையும் போராளிக் குழுக்களையும் சேர்ந்தவர்கள். தங்கள் கொள்கைக்காக அவர்கள் போராடி உயிரிழந்தனர். ஆனால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? யோசித்துப் பார்க்கிறேன்.

மதுரையைச் சேர்ந்த ஒரு விதவைத் தாயின் ஒரே மகன் மேஜர் கோபால கிருஷ்ணா, இந்திய & பாகிஸ்தான் போருக்கு சற்று முன்பாக சோவியத் யூனியனுக்கு சிறப்புப் பயிற்சிக்கு புறப்பட இருந்தார். போர் வந்துவிட்டதால் அவர் செல்லவில்லை. அடுத்தநாளே, அதாவது போருக்கு இரண்டு நாட்கள் முன்பாக எல்லையில் நாங்கள் சிலர் சென்றுகொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஒற்றைக் குண்டுக்கு அவர் பலியாகிவிட்டார்.

திரிகோணமலையில் ஒருமுறை புலிகள், எங்களை ஆதரித்துக்கொண்டிருந்த ஈபிஆர்எல்எஃப் தலைவரான பத்மநாபாவைக் கொல்ல இரண்டு கொலையாளிகளை அனுப்பியிருப்பதாக தகவல் அறிந்தேன். அதிகாலை 3 மணிக்கு அவரை எழுப்பி தகவல் தெரிவித்தேன். பத்மநாபா அதைக் கேட்டு சிரித்தார். "கர்னல் சார், இதற்கெல்லாம் என்னை எழுப்பாதீர்கள். இதை நினைத்து நீங்களும் தூக்கம் இழக்கவேண்டாம். நான் ஆயுதம் ஏந்திய அன்றே இறந்துபோய்விட்டேன்" என்று கூறிவிட்டு அவர் தூக்கத்தைத் தொடர்ந்தார். ஆனால் என்னால் தூங்கமுடியவில்லை. அப்போது அவர் உயிர்தப்பினார் என்றாலும், போர் முடிந்த பிறகு சென்னையில் அவரை புலிகள் கொன்றுவிட்டனர். போர்களில் மரணத்தை நானும் அருகே சந்தித்திருக்கிறேன். இலங்கையில், 1989 என்று நினைக்கிறேன். லெப்டினெண்ட் ஜெனரல் ஏ.எஸ். கல்கட்டுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நித்திகைகுளம் என்ற இடத்தில் நமது படைகள் புலிகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றோம். ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய உடனேயே புலிகளின் ராக்கெட் ஒன்று தாக்கியது. ஹெலிகாப்டர் நெருப்புக் கோளமாக வெடித்தது. நாங்கள் மயிரிழையில் பிழைத்தோம். அருகிலிருந்த ஏரிக்கரையைத் தாண்டி நாங்கள் பதுங்கியபோது, இன்னொரு ராக்கெட் பாய்ந்து வந்து அருகில் நின்று கொண்டிருந்த வேறொரு ஹெலிகாப்டரைத் தாக்கியது. எங்களுக்குப் பாதுகாப்பாக மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் புலிகளைத் திருப்பி தாக்கியது. ஆகவே, நாங்கள் பிழைத்தோம். அன்றுதான் நான் போர்களை வெறுக்க ஆரம்பித்தேன். உயிர் பயத்தால் அல்ல, அவற்றுக்கு எந்தவிதமான அர்த்தமும் இல்லை என்பதால். போர் தொடங்குவதற்கு முன்பே ஏன் கோபாலகிருஷ்ணா ஒற்றை தோட்டாவுக்குப் பலியானார்? போரின் நடுவே ராக்கெட் தாக்குதலையும் மீறி எப்படி நாங்கள் உயிர் தப்பினோம்? என்னிடம் பதில்கள் இல்லை.

கேர்னல் ஆர். ஹரிஹரன் (ஓய்வு) இந்திய அமைதிப்படையின் ராணுவ உளவுப்பிரிவு தலைவராகப் பணியாற்றியவர். தற்போது சர்வதேசப் பிரச்னைகள் தொடர்பாக எழுதிவருகிறார்.

காணொளி: "இந்தியா இலங்கையில் போரை நடத்துவதற்கு அல்லாமல், அமைதியை நிலைநாட்டவே பாடுபட வேண்டும்"

மெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக ஜனவரி 23ஆம் திகதி, வெள்ளிக்கிழமை அமெரிக்க தமிழர்கள் பெரும் அமைதிப் பேரணியினை நடத்தியுள்ளனர். இதில் தமிழீழத்தை அங்கீகரித்து தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாத்மா காந்தி போல வெள்ளை உடையணிந்து, "ரகுபதி ராகவ ராஜாராம்" என்ற பாடலைப் பாடிய படி, "அமைதியைப் போதித்த அந்த மகான் பிறந்த நாடு, போரை நடத்துவதற்கு அல்லாமல், போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவே பாடுபட வேண்டும்" என பேரணியில் கலந்து கொண்டோர் வலியுறுத்தினர்.

சிறிலங்கா படையினருடன் - போர்முனையில் - இந்தியப் படை அதிகாரிகளும் சேர்ந்து செயற்படும் படங்கள் கொண்ட பதாதைகளையும், பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாஙியிருந்தனர்.

"தமிழீழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்போதும் நல்லது. தமிழர்கள் எப்போதுமே இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டதில்லை. இந்தியாவின் தெற்கில் ஒரு பெரும் காப்பு அரணாக தமிழீழம் எப்போதுமே இருக்கும். அதனால் தமிழீழப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்." என அமெரிக்க தமிழர் பிரதிநிதிகள் இந்திய தூதரக அதிகாரி ராஸ்கோத்ராவிடம் வலியுறுத்தினர்.

January 24, 2009

ரவூப் ஹக்கீம்: "இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்"

"தேசியவாத அலையில் பெரும்பான்மை மக்கள்:" புத்தளம் நகரில் அண்மையில் இடம் பெற்ற வட மேல் மாகாண சபைத் தேர்தல் கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை:

RH0125.jpg

டிசம்பர் 2007, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலமை அலுவலகம் - "தாருஸ்ஸலாம்" இல் தலைவர் ரவூப் ஹக்கீம்

மாகாண சபைத் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்குள் ஒரு பொதுத் தேர்தல் வரலாம் என்று இப்போது கட்டியம் கூறப்படுகிறது. எனவே, எமக்கு இருக்கின்ற சவால்கள் யாவும் ஆகக் கூடியது 90 நாட்களுக்குத் தான் இருக்கப் போகிறது. சகல கட்சிகளிலும் இருந்தும் பிரித்து, விலைக்கு வாங்கப்பட்டவர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டு இருப்பதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் காலம் காலமாக சுதந்திரக்கட்சியோடு இருந்தவர்கள் தான்.

இனங்களுக்கு இடையில் இருக்கின்ற ஒற்றுமையைக் குலைக்கின்ற வகையிலும் சிறுபான்மை இனங்களை வந்தான் வரத்தான்களாகவும், அவர்களுக்கு நாட்டின் பிரஜா உரிமை வழங்கக் கூட அருகதையில்லை என்ற வகையிலும் இனவாதக் கட்சியின் தலைமைத்துவங்கள் அரசாங்கத்திடம் சோரம் போயிருக்கின்றன.

யுத்தமுனை வெற்றிகளை மட்டும் மூலதனமாகக் கொண்டு ஆட்சியிலே நீடிக்கலாம் என்று நினைப்பவர்களின் பிரசாரங்களினால் நாட்டில் தேசியவாத அலை வீசுகிறது. நாட்டில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டி விட்டோம் என்ற இறுமாப்பில் புறப்பட்டிருக்கும் இந்த தேசியவாத அலையில் பெரும்பான்மையின மக்கள் அசந்து போயிருக்கிறார்கள். சிறுபான்மையின மக்கள் என்ன நடக்கப் போகிறது என்று அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றால் தங்களால் நிம்மதியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை பல தமிழ்ப் புத்திஜீவிகளிடம் இருக்கவில்லை. எனவே, புலிகளுடைய வெற்றி தமிழர்களிடையே வெற்றி என்று அவர்கள் எண்ணவில்லை. அன்றிருந்த சங்கடங்களினால் அவர்களில் சிலர் ஆதரவாகப் பேசியிருக்கலாம்; இன்றும் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மை அதுவாகத்தான் இருந்தது.

ஆனால், புலிகளுடைய வெற்றி தமிழர்களுடைய வெற்றி அல்ல; ஆனால், புலிகளுடைய தோல்வி தமிழர்களுடைய தோல்வியாகப் போய்விடும் என்ற தமிழர்களுடைய பீதி, மஹிந்த ராஜபக்ஷவின் போக்கினாலும், நோக்கினாலும் இன்று ஏற்பட்டிருக்கிறது. இதுதான் அப்பட்டமான உண்மை.

அதன் காரணமாகத்தான் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசுகின்ற பின்புலம் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த அரசு போகின்ற போக்கும், அதன் வீரப்பிரதாபங்களும், பேரிகை முழக்கங்களும் சிறுபான்மை மக்களை அவர்களது கொத்தடிமைகளாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்த அரசாங்கத்திலுள்ள சிறுபான்மை இன அமைச்சர்களும் முஸ்லிம் அமைச்சர்களும் இதுபற்றிப் பேசத் தயங்குகின்றனர்.

இந்த அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் நேரடியாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர். அமைச்சர் பௌஸி கூட ஐ.தே.க.வினூடாக அரசியலுக்கு வந்தவர்தான். ஆனால், நிறைய முஸ்லிம்கள் இந்த அரசில் அமைச்சர் பதவிகளால் அலங்க?க்கப்படுகிறார்கள். அண்மைக் காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலுள்ள முஸ்லிம்களை விட, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அரசுக்கு சோரம் போனவர்களுக்கு இப்போது கவனிப்பு அதிகம். ஏனென்றால், இந்த அரசுக்கு முஸ்லிம்களின் இந்த விடுதலை இயக்கத்தை அழிக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம்களாகிய எமக்கு என ஒரு இயக்கம் தேவை.இந்த இயக்கத்துக்காகவே நாம் எமது பதவிகளை தூக்கி எறிந்து விட்டு அரசை விட்டு வெளியேறினோம்.

இந்த அரசாங்கத்துடன் கரு ஜயசூ?யவும் நானும் ஒன்றாக சேர்ந்து கொண்டோம்.

நான் முதலில் வெளியேறிய பின்பு அவர் வெளியேறியிருக்கிறார். சேர்ந்ததற்கான காரண, காரியங்கள் வேறாக இருந்த போதும் அரசை விட்டு வெளியேறுவதற்கு இருவருக் கும் ஒரே காரணம் தான் இருந்தது. இந்த அர சாங்கத்தில் இருவரும் எமது சுய கௌர வத்தை அடகு வைத்து, இருக்க முடியாது என்று தான் வெளியேறி வந்தோம்.

எமது இந்தக் கட்சியை பலவீனப்படுத்து வதற்கு எடுத்த முயற்சி இந்தப் புத்தளத்து மண்ணில் இருந்துதான் ஆரம்பமாகியது.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடைசி ஒருவர் இருக்கும் வரை அது உயி ரோட்டம் உள்ள இயக்கமாக வாழும் என் பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்த இயக்கத்துக்கு தலைவர்கள் வரலாம்; போகலாம். இந்த இயக்கத்தை நாம் வைத்திருப்பது நாம் கௌரவமான கண்ணியமாக வாழவேண்டும் என்பதற்காகவே.

வெறுமனே கையறு நிலையில் கையேந்தும் அரசியலை நாம் செய்யமுடியாது. சரணாகதி அரசியல் செய்யும் கட்சியாக இந்த இயக்கத்தை மாற்றிவிட முடியாது.

இந்த அரசாங்கத்துடன் நாம் இணைந்திருந்தபோது எமக்கு இரண்டு விடயங்களே சவாலாக இருந்தன.அரசுக்கு உள்ளேயிருந்து அழிவதா? அல்லது வெளியேறி அழிவதா? என்பதுதான் அது. ரோஷம் கெட்டவர்களாக, அரசாங்கத்துக்குள் நாமிருக்கும் போது, இவ்வளவு அநியாயம் நடக்கும் போது, அதற்கு உடந்தையாக இருந்து பழியுடன் அழிவதை விட வெளியே வந்து அழிவதே மேல் எனக் கருதி வெளியேறினோம்.

ஆனால், இந்த இயக்கத்தை மக்கள் அழியவிடுவதற்குத் தயாராக இல்லை. எமக்கு நாளுக்கு நாள் ஊக்க?ம் தெம்பும் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று வீசுகின்ற தேசியவாத அலையும், யுத்த களப் பின்னணியில் நிகழும் இத்தனை பித்தலாட்டங்களும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகிறது என நாம் பார்க்கப் போகிறோம்.

பிரபாகரனைப் பிடித்து அச்சாறு போடப்போவதாக ஒரு பிரதமர் கூறுகிறார். ஒரு பிரதமர் கூறக்கூடிய வார்த்தையல்ல அது. இப்படி உன்மத்தம் பிடித்தது போல பேசி, பெரும் தேசியவாத உணர்வுகளைக் கிளறி விட்டு, சிங்கள மக்களை வெறியிலே வைத்துக் கொண்டிருக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

தேசப்பற்று என்ற விஷயம் இன்று ஒரு மலிவான விற்பனைப் பண்டமாக மாறிவிட்டது. பிரதமர், பிரபாகரனைப் பிடித்து அச்சாறு போடுவேன் என்று பேசினால் தான் தேசப்பற்று என்று நினைக்கின்ற அளவுக்கு அது மிகவும் கேவலமானதும் மலிவானதுமான நிலைக்குப் போய்விட்டது.

"தேசப்பற்று என்பது ஒரு அயோக்கியனின் கடைசி அடைக்கலம்'' என ஒரு ஆங்கிலக் கவிஞன் கூறியுள்ளான். அயோக்கியத்தனத்தின் கடைசி அடைக்கலம் தான் தேசப்பற்று என்று இத்தேசப்பற்று பார்க்கப்படுகிறது.

பலவந்தப்படுத்தி நாட்டிலுள்ளவர்களுக்கு தேசப்பற்றைப் பருக்கி விட முடியாது. அது தானாகவே வரவேண்டும். இது எங்களுடைய வெற்றி என்று நாடு முழுவதும் கொண்டாடும் அளவுக்கு பரந்த விரிந்த மனப்பாங்கோடு இவ்விடயம் அணுகப்பட வேண்டும். ஆனால், அப்படி இது நடக்கவில்லை.

இந்த அரசாங்கம் ஆட்டம் கண்டதன் அடிப்படை தான் சக்தி, சிரச தொலைக்காட்சி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். அரசின் வெற்றிக்களிப்பின் கொண்டாட்டம் இதுவாக இருந்தால் அந்தக் கொண்டாட்டம் எங்களுக்குத் தேவையில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமான ஒரு இடத்தில் பத்திரிகை ஆசிரியன் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் இந்த ஜனாதிபதிக்கு ஒன்றுமே தெரியாதாம். இதுதான் இந்நாட்டின் முப்படைத் தளபதியின் நிலை என்றால் இந்த நாட்டை இறைவன் தான் காக்க வேண்டும்.

January 23, 2009

திரை இசை: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்..தெய்வம்

பாடல்: பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம்
திரைப் படம்: கண்ணா நலமா
பாடியவர்கள்: டி.எம். சௌந்திர ராஜன், பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே. ராமமூர்த்தி

பாடல் வரிகள்:

KSTC0123.jpg

பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்

அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்

அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை ... இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என் கிறார்கள்
பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ ... நகல் யாரோ
அசல் யாரோ நகல் யாரோ
அறியேனென்று அதிசயித்த மன்னன் சொன்னான் முடிவில் ஒன்று
முடிவில் ஒன்று

இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே ... காவலா, இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..
காவலன் சென்றான் ..இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான் .....

மன்னா ...மன்னா ஆஆ

அம்மா என்றொரு குரலில் ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும் புன்னகை புரிகின்றாள்
புன்னகை புரிகின்றாள்

பாதி கொடுங்கள் என்றே அவளோ மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ மன்னனைத் தடுக்கின்றாள்

இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம் மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்

பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்

சக்தி வடிவானவளே அன்னை அன்னை
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள் தான் வளர்த்த கண்ணை கண்ணை

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பக்தியிலும் அன்னை தான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள் வளத்த செல்வம் செல்வம்

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பதியம் வைத்த மரம் புதிய தோட்டம் தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும் அதன் சொந்தமாவ்தில்லை

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

உதிரம் கொண்டு வரும் இதயம் போல ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது அன்னை என்ற சொல்லை

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பூவும் மஞ்சளுடன் பொங்கும் தேவி அவள் புவனேச்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் .. சக்தி ஓம் ..

பூஜை செய்து வரும் மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் ...

பாசம் பொக்கி வரும் தேவி சக்தி அவள் ஜெகதீஸ்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் .
.
பார்வை தன்னில் உயர் நீதி சொல்ல வரும் பரமேஸ்வரி

சக்தி ஓம் .. சக்தி ஓம் .

January 21, 2009

'தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்வது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எதிரான மனநிலையை உருவாக்காதா?'

"இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகளின் அதீத ஆவேசம் தமிழக அரசின் மெத்தனப் போக்கை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், தமிழகத்தை ஒரு வாரம் ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டமும் அவசியமா? இவை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எதிரான மனநிலையை உருவாக்காதா?," இவ்வாறு தமிழக நாளேடு தினமணி ஜனவரி 22 ஆம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் கேள்விகள் எழுப்பியுள்ளது.

"கடைசி வாய்ப்பு" என்று தலைப்பிட்டு, தினமணி எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கம் வருமாறு:

"வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனன் இலங்கை சென்று ராஜபக்ஷவை சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளார். அதன் விவரங்கள் சரியாக வரவில்லை. ஒருவேளை பிறகு வரக்கூடும்'' - தமிழக முதல்வர் கருணாநிதியின் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வரிகளைப் படிக்கும் அரசியல் தெரிந்த தமிழர் எவருமே அதிர்ச்சி அடைவார்கள்.

மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் மிக முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி இருக்கின்ற வேளையில், அவர் நினைத்தால் சிவசங்கர் மேனன் நேரடியாக இலங்கையிலிருந்து கோபாலபுரத்துக்கு வந்து, ராஜபக்ஷவிடம் தான் பேசிய விவரங்களை தெரிவித்துப் பிறகே தில்லி செல்லும்படியான கட்டாயத்தை உருவாக்கியிருக்க முடியும்.

சிவசங்கர் மேனன் தில்லி சென்று திரும்பிய பிறகும், முதல்வர் முன்பு சொன்னதைப் போலவே "சில நாள்கள் பொறுத்திருப்போம்'' என்று காத்திருந்த பின்னரும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பது பற்றி வெளிப்படையாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

ஆனால், இலங்கை ராணுவத்தின் தாக்குதல் மேலும் மேலும் தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பை தமிழக அரசு, குறிப்பாக திமுக, இழந்து வருகிறதோ என்று தோன்றுகிறது.

இந்நிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகளின் அதீத ஆவேசம் தமிழக அரசின் மெத்தனப் போக்கை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், தமிழகத்தை ஒரு வாரம் ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டமும் அவசியமா? இவை இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு எதிரான மனநிலையை உருவாக்காதா?

அதற்கு மாறாக, மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள திமுக, பாமக இரு கட்சிகளும் மத்திய அரசுக்கு நெருக்கடி தரவேண்டுமே தவிர, தமிழக மக்களுக்கு அல்ல.

சிவசங்கர் மேனன் சுமார் 90 நிமிடங்கள் இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் பேசியதில், "தீவிரவாதத்தை ராணுவத்தின் மூலம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும்' என்ற அரிய கருத்தை அமைதியாகக் கேட்டுவிட்டு வந்திருக்கிறார். அதாவது போரை நிறுத்த மாட்டோம் என்பதை இதைவிட எளிமையாக யாரும் சொல்லிவிட முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அண்மையில்தான் இலங்கை அரசு தடை விதித்தது. புலிகள் பலம் இழந்துவிட்டார்கள்; அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இனி அவசியமில்லை என்ற நம்பிக்கை வந்தபிறகுதான் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மிகத் தெளிவாக, "மனிதக் கேடயம் அமைத்து போரிடும் விடுதலைப் புலிகள்'' என்று அடைமொழியுடன்தான் இலங்கை அரசு இந்தத் தடையை அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசு உலக நாடுகளுக்கு இப்போதே அறிவித்துக் கொள்கிறது: "தமிழர்கள் பல ஆயிரம் பேர் இறந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று.

காஷ்மீர் பிரச்னையை வைத்துக்கொண்டு, தமிழீழத்துக்கு ஆதரவு தெரிவிக்க இந்திய அரசால் முடியாது என்றும், தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்திய அரசு, விடுதலைப் புலிகள் மீது போர் தொடுக்கக்கூடாது என்றும் சொல்ல முடியாது என்பதுமான வாதங்களை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயரச் செய்வதும், அவர்களுக்கு மருந்து, உணவு கிடைக்கச் செய்வதும், அவை ஒழுங்காக கிடைக்கிறதா என்பதைக் கண்காணிப்பதும் இந்திய அரசால் செய்யக்கூடிய ஒன்று என்பதை இவர்கள் ஏன் உணர மறுக்கின்றனர்?

இலங்கைத் தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ள பகுதிக்குள் இம்மாதம் ஜனவரி 9-ம் தேதிக்குப் பிறகு செல்லவே முடியவில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 12 நாள்கள் ஓடிவிட்டன.

போர் நிறுத்தம் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான விஷயமாக இலங்கை அரசு கருதக்கூடும். ஆனால் தமிழர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு இடம்பெயர்வதை உலக நாடுகள் அனைத்தும் மனிதநேயமாக மட்டுமே பார்க்கும். இவர்கள் இடம்பெயர்வதற்கு ஓரிரு வாரம் போர் நிறுத்தம் அவசியம். இதைச் செய்து முடிக்க தமிழக அரசு தனது அரசியல் பலத்தைக் காட்டாவிட்டால் பிறகு அதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும். இதெல்லாம் தெரிந்தும் வாய்மூடி மெüனம் சாதித்து, கடைசி வாய்ப்பையும் நழுவவிட்டுவிட்டு, ஈழத் தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களை, "ஏ, தாழ்ந்த தமிழகமே....' நீ தாங்கிக்கொள்வாயா!

தமிழர் பேரவலங்களை பார்ப்பதற்கு சுயாதீன குழுவை சர்வதேசம் அனுப்பவேண்டும்-சம்பந்தன் எம்.பி

ன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பேரவலங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் உடனடியாக சுயாதீனக் குழுவொன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனவரி 21ஆம் திகதி, புதன்கிழமை நடை பெற்ற நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதாக வீரகேசரி பத்திரிகை தெரிவித்துள்ளது.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

வன்னி மண்ணில் அவலம் அல்ல பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தினால் பச்சிளம் பாலகர்கள், குழந்தைகள் கூட கொன்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்கள் பசி, பட்டினியில் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். அவர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிக்கின்றனர், அகதிகளாக அங்குமிங்கும் அலைகின்றார்கள். அவர்களை மரங்களின் கீழும், காடுகளிலும் வாழ வைக்கின்றீர்கள். அந்த மக்களுக்கு மருத்துவ உதவிகளை கூட வழங்குவதற்கு நீங்கள் தயாரில்லை. இதனைதான் நீங்கள் விடுதலை என்கின்றீர்களா? இதுவா விடுதலை? இதுதானா உங்களின் விடுதலை?

தமிழ் மக்கள் கண்ணியமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதை உங்களால் கூற முடியுமா? எவ்வாறு கூற முடியும். தமிழ் மக்களை காலால் போட்டு நசுக்கின்றீர்கள். அவர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்குகின்றீர்களா?

யுத்த நிறுத்த உடன்படிக்கை மற்றும் பொதுக் கட்டமைப்பு போன்ற ஒப்பந்தங்களுக்கு எதிராக ஜே.வி.பி. கோஷம் எழுப்பியது. போராட்டங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது. இவையாவும் அவர்களுக்கு முக்கியமானது. ஏனென்றால் சிங்கள வாக்குகள் அவர்களுக்கு முக்கியமானது. அதனால் தான் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது.

சில விடயங்களில் தீர்மானத்தை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் சிந்தித்திருக்க வேண்டும். குறிப்பாக கடுமையான தீர்மானங்களை எடுப்பதை தவிர்த்திருக்கலாம். அவ்வாறான முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்தமையினால் நாட்டின் நிலைமை இந்தளவிற்கு மோசமடைந்துள்ளது. நாட்டின் நிலைமையை பார்த்தீர்களா? பாருங்கள்.

எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனமும் வன்னியில் இல்லை, பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உயிருக்காக போராடுகின்றனர். இடம்öபயர்ந்த மக்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் உண்மையான நிலைமையை உலகத்திற்கு சொல்ல வேண்டியது அவசியம். இராணுவப் பேச்சாளரோ அல்லது அரசாங்கத் தரப்பினரோ உண்மையை சொல்வார்கள் என்றும் நாம் நம்பவில்லை.

வன்னி மக்களின் பாதுகாப்பு அங்குள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பில் எங்களுக்கு தெளிவாக அறிய முடியாதுள்ளது. எனவே சுயாதீன குழுவொன்றை வன்னிக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பி தமிழ் மக்களின் பேரவலங்கள் தொடர்பில் பார்வையிடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்துடன் இந்தியாவிலிருந்தும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறுபட்ட தரப்பினர்களை கொண்ட குழுவொன்றை வன்னிக்கு அனுப்பி அங்குள்ள உண்மையான நிலைமைகளை பார்வையிடல் வேண்டும். ஜனாதிபதி இந்திய பிரதமருடன் தொலை பேசியில் பேசுகின்றார் ஏன்? நேரிலும் சென்று பேசுகின்றார். கிழக்கை மீட்டு விட்டதாகவும் அங்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர் என்றும் கூறுகின்ற ஜனாதிபதி கிழக்கின் நிலைமைகளை பார்வையிடுவதற்கு வருகை தருமாறு இந்திய தரப்பினரை ஏன்? அழைக்கவில்லை. அதிஉயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள சம்பூர் உள்ளிட்ட பிரதேசங்களில் மக்களை மீள குடியேற்றாதது ஏன்? அங்குள்ள வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கு மீள குடியேறக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு சதித்திட்டமொன்று அரங்கேற்றப்படுவதாக கருதுகின்றோம்.

யுத்தம் பற்றிய உண்மைச் செய்திகளை அறியும் உரிமை அனைவருக்கும் உண்டு. எந்த பொதுமக்களுக்கும் அங்கு செல்லக்கூடிய நிலைமை வேண்டும். எனினும் இவற்றை தடுத்து நிறுத்துவதன் மூலம் அங்குள்ள உண்மையான நிலைவரங்களை அரசாங்கம் மூடி மறைத்து வருகின்றது. இரகசியமாக அரசாங்கம் முன்னெடுக்கும் உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்.

காசாவில் யுத்தம் நடைபெறும் பகுதிகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று வருகின்றனர். அங்கு ஊடகவியலாளர்கள் செல்வதை யாரும் தடுக்கவில்லை. தாக்குதல்கள், இழப்புகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்தன. இங்கு அந்த நிலைமை இல்லை. அங்கு செல்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை. இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் பத்திரிகைகள் மூலம் பேசப்பட்டாலும் வன்னி பகுதியை தனிமைப்படுத்திவிட்டு அரசாங்கத்தினால் முன் செல்ல முடியாது. 4 இலட்சம் வரையான மக்களை அரசாங்கம் அவல நிலைக்கு தள்ளிவிட்டது என்பதனால் தான் இவ்விடயத்தில் சர்வதேசத்தை தலையிடுமாறு வேண்டுகின்றோம்.

சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படைப் பிரச்சினையை கண்டுபிடித்து அதனை தீர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவியேற்பு உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எமது நாட்டில் என்ன நடைபெறுகின்றது. வன்னி மக்களை பற்றி யாராவது கதைத்திருக்கின்றார்களா? எனவே தான் சுயாதீன குழுவொன்றை அனுப்பி தமிழ் மக்களின் அவல நிலையை நேரில் பார்வையிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள் சார்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

January 19, 2009

காணொளி: பாவேந்தர் பாரதிதாசன் ~ வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா?

ராகுல், கதிர் 2006 இல் வெளிவந்த சிவப்பதிகாரம் திரைப்படத்திலிருந்து, இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிதாசனின் "வலியோர் சிலர் எளியோர் தமை" பாடல் முதலில் 1966 இல் வெளிவந்த "மணிமகுடம்" என்ற திரைப்படத்திலும் இடம்பெற்றது.

Sivap0120.jpg

திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்

லியோர் சிலர் எளியோர்
தமை வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!

கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!

குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே

பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்!

January 18, 2009

'இலங்கையில் மேலும் சீரழிவைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கே இந்தியா உதவிக்கொண்டிருக்கின்றது'

"லங்கை இனநெருக்கடியை தவறான முறையில் ஆரம்பம் முதல் தொடர்ந்து கையாளும் இந்தியா, நிலைவரங்கள் மேலும் சீரழிவைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கே உதவிக்கொண்டிருக்கின்றது" என கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரி தினக்குரல், இன்று ஞாயிறு 18ஆம் திகதிய ஆசிரியத் தலையஙத்தில் தெரிவித்துள்ளது.

MR Menon Kandy.jpg

இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு வந்து தமிழ் மக்களின் இடர் நீங்க ஆக்கபூர்வமான முடிவேதுமின்றி புது டில்லி திரும்பியது தொடர்பாக தினக்குரல் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

"மேனன் விஜயம்" என்ற தலைப்பிலான அவ் ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக வருமாறு:

இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கான தனது இரு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் புதுடில்லி திரும்பியிருக்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்கத் தரப்பினர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடனும் இறுதியாக கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மேனன் இவர்களுடன் ஆராய்ந்திருக்கக்கூடும் என்றாலும், வன்னியில் தீவிரமடைந்திருக்கும் போரின் விளைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் தஞ்சமடைந்திருக்கும் 3 இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவித் தமிழ் குடிமக்கள் எதிர்நோக்குகின்ற மனிதாபிமான நெருக்கடியே பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடத்தை வகித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த மக்களுக்கான இந்தியாவின் இரண்டாம் கட்ட மனிதாபிமான உதவிகளை (4 கோடி ரூபா பெறுமதியானவை) வழங்கும் அறிவிப்பை மேனனின் விஜயத்தின் போது இந்தியா விடுத்திருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறக்கூடிய மனிதாபிமான உதவிகளுக்கு அப்பால் போரை நிறுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டுமென்றே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புக்கு உறுதுணையாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் போர்நிறுத்த மொன்றைக் கொண்டு வருவதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசாங்கம் வற்புறுத்த வேண்டுமென்று அண்மைக்காலமாக கோரிக்கை விடுத்த வண்ணமிருக்கின்றன. ஆனால், இந்திய அரசாங்கமோ போர் நிறுத்த விவகாரம் குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் பேசுவதற்குத் தயாராயில்லை. தமிழகத்தை ஆட்சி செய்கின்ற முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி உட்பட மாநிலத்தின் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடந்த மாதம் புதுடில்லியில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கைச் சந்தித்து முறையிட்டபோது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதாக அவர் உறுதியளித்தார். ஆனால், அந்த உறுதிமொழி காப்பாற்றப்பட வில்லையே என்று இந்தியப் பிரதமர் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத இயக்கங்கள் என்று எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், இலங்கை நெருக்கடி தொடர்பாக அந்த மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று புதுடில்லி அக்கறைப்படவில்லை. மத்திய அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுக்கக் கூடிய போதுமான அரசியல் வலுவுடன் கலைஞர் கருணாநிதி இருக்கின்ற போதிலும், இலங்கை நெருக்கடி தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு முரணாக எத்தகைய நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை என்று சபதம் செய்தவர் போன்று அவர் கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான பெரும்பாலான தமிழகக் கட்சிகள் மத்திய அரசாங்கத்தை இந்த விடயத்தில் இனிமேல் நம்பிப் பயனில்லை என்று பகிரங்கமாகக் கூறுகின்ற போதிலும், கலைஞர் கருணாநிதி இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம் என்றுதான் கூறிக் கொண்டிருக்கிறார்.

இத்தகைய நிகழ்வுப் போக்குகளின் பின்புலத்திலேதான் இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயம் இடம் பெற்றிருக்கிறது. பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பவேண்டுமென்ற தமிழகக் கட்சிகளின் கோரிக்கைக்கு எதிராக கொழும்பில் ஏற்கெனவே அரசாங்கத்துக்குச் சார்பான பேரினவாத அரசியல் சக்திகளின் குரல்கள் ஓங்கி ஒலித்தன. முகர்ஜி கொழும்பு வருவதற்குத் தயாராயில்லை என்பதற்கு அப்பால் அவர் வருவதை ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் விரும்பவுமில்லை. அதுமாத்திரமல்ல, அவ்வாறு முகர்ஜி வந்திருந்தாலும் கூட அவருக்கு அவமதிப்பைத் தரக்கூடிய பதிலுடன் அரசாங்கம் தயாராயிருந்தது என்பதிலும் சந்தேகமில்லை. ஆரம்பம் முதலிருந்தே புதுடில்லி இலங்கை இனநெருக்கடியை தவறான முறையில் கையாண்டதன் விளைவே இதுவாகும்.

பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய மத்திய அரசாங்கம் காட்டுகின்ற தயக்கம் தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடிய பிரதிபலிப்புக்களை சமாளிப்பதற்காகத்தான் மேனன் அனுப்பப்பட்டிருந்தாரோ என்ற சந்தேகமும் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றது. எது எவ்வாறிருந்தாலும் இலங்கையில் தற்போதைய நிலையில் போர்நிறுத்தம் என்பது பற்றிப் பேசுவதற்கு கொழும்போ அல்லது புதுடில்லியோ அக்கறைப்படவில்லை என்பதே உண்மையானது. அதனால், மேனனின் விஜயம் இலங்கையின் அரசியல் இராணுவ நிகழ்வுப்போக்குகளில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துமென்று நம்புவதற்கில்லை. மேனனுடன் பேசிய இலங்கை அரசாங்கத் தரப்பினர் குறிப்பாக வெளியுறவு அமைச்சர் ரோஹிதபோகொல்லாகம 1987 இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போதைய இராணுவ வெற்றிகளின் விளைவாக ஏற்பட்டிருக்கின்றது என்றும் அந்த உடன்படிக்கைக்குப் பின்னர் இலங்கை அரசியலமைப்பிற்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பல மார்க்கங்களை அரசாங்கம் ஆராய்ந்துகொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறார். இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கை முக்கியமான ஒரு திறவுகோல் என்பதே ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று இப்போது இந்தியாவுக்கு சொல்லப்படுகிறது.

அவ்வாறானால், ஜனாதிபதி கூட்டிய சர்வகட்சி மகாநாட்டுக்கும் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவினால் சமர்ப்பிக்கப்படக்கூடிய யோசனைகளுக்கும் என்ன கதி நேரப்போகிறது என்பது இன்னொரு கேள்வி. இந்தியாவின் கடந்த இரு தசாப்தகால அணுகுமுறை இலங்கையில் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான எந்தவொரு அரசியல் அபிலாசையையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத பேரினவாதச் சக்திகளையே வலுப்படுத்தி வந்திருக்கின்றது என்றும் நாம் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். இந்தச் சக்திகளே போரை முழு மூச்சுடன் முன்னெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியவை என்பதை இச்சந்தர்ப்பத்திலாவது புதுடில்லி புரிந்துகொள்ளுமா? இந்தியாவின் அணுகுமுறை காரணமாகத் தோன்றிய அரசியல் கோலங்கள் இனநெருக்கடி தொடர்பில் புதுடில்லி ஆரோக்கியமான பங்களிப்பை செய்வதை தடுக்கின்றன. இலங்கையில் நிலைவரங்கள் மேலும் சீரழிவைச் சந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கே இந்தியா உதவிக்கொண்டிருக்கின்றது.

January 17, 2009

காணொளி: ஜனவரி 17ஆம் திகதி எம்.ஜி.ஆரின். 92 ஆவது பிறந்ததினம்

"புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர் போராட்டத்துக்கு மிகுந்த ஆதரவை வழங்கியதோடு அல்லாமல் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் குறியீடாகத் தமிழகம் இருப்பதை உணர்ந்து செயல்பட்டால், இதற்கு உள்நோக்கங்கள் வேறு இருக்கலாம். அது வேறு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டுமென்ற ஆர்வத்துக்கு ஆதரவாகவும் இருந்துள்ளார்" - இவ்வாறு தெரிவித்திருப்பது, தமிழக இணைய சஞ்சிகை ஆறாம் திணை.

["நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி"]

அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே எந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்து

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஓளிமயமாக வெளிச்சம் தாருங்களே

நாடும் வீடும் உங்களை நம்பி நீஙகள்தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதையம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வழர்ந்து

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே - - கண்ணதாசன்

அவதார புருஷர் எம்.ஜி.ஆர் நினைவாக ஆறாம் திணையில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்:

MGRP1985.jpgமிழக அரசியல் வரலாறும் தமிழ் சினிமா வரலாறும் ஒன்றை ஒன்றை சார்ந்து பின்னிப் பிணைந்து செல்லும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். தமிழர் வாழ்வியலி இன்றியமையா வெளிப்பாடாகத் தமிழ் சினிமா மாறிவிட்டது. ஒருபுறம் தமிழ் சினிமாவில் 'நல்ல தரமான' படங்கள் இல்லையே என வருந்தும் போக்கும், இன்னொருபுறம் வெகுசனத் தொடர்பு சாதனம் எனும் வகையில் குறிப்பாக அரசியல் தொடர்புச் சாதனம் எனும் வகையில் தமிழ் சினிமாவின் சாதனை உலகிலேயே மிக முக்கியமானது.

தமிழ்ச் சமூகத்தில் சினிமா என்னும் தொடர்புச் சாதனத்தின் வன்மைப்பாட்டினைத் தமிழக வரலாற்றில் அது தொழிற்பட்ட முறைமை கொண்டு புரிந்து கொள்ளலாம். அதாவது தமிழக வரலாற்றில் 1967 லிருந்து இன்றுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக வந்துள்ளவர்கள் தமிழ் சினிமாவோடு தொடர்புடையவர்கள். குறிப்பாக, அவர்களது சினிமாத் தொடர்புக்கும் அவர்கள் முதலமைச்சர்களானதற்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. தமிழகத்தின் இதுகாறுமான வரலாறு இதனை நிரூபிக்கிறது.

சினிமாவின் வல்லமையை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் முன்னணியிலிருந்து செயல்பட்டார்கள். தமிழ் சினிமாவை தமிழக அரசியல் வரலாற்றோடு இணைத்து வளர்த்துச் சென்றனர். இக் காலத்தில் அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்களின் வருகை பின்னர் வரும் வரலாற்று இயக்கப் போக்கின் திசைப்போக்கை நிர்ணயித்தன. இது பெரிய கலைஞர் பட்டாளம் ஒன்றை அரசியலில் உள் நுழையவும் வழியமைத்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் எல்லாம் இப் பின்புலத்தின் பலத்திலேயே செல்வாக்கு மிக்க நபர்களாகக் கலைத்துறையிலும், அரசியலிலும் பிரகாசிக்க முடிந்தது.

தமிழகத்தில் இதுவரை அரசியல் தலைவர்களாக முதலமைச்சர்களாக வந்த அண்ணாதுரை, கருணாநிதி இவர்களை அடுத்துத் தமிழக அரசியலில் மிகுந்த வெகு ஜனக் கவர்ச்சியுடன் அரசியல் தலைவராகப் பரிணமித்தவர் எம்.ஜி.ஆர். 1936 -ல் 'சதிலீலாவதி' எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி சிறு சிறு வேடங்களில் நடித்து 'ராஜகுமாரி'யில் கதாநாயகனாகி 'மந்திரகுமாரி' யால் பெரும் புகழ் பெற்றார். இதன் பின்னர் தமிழ் சினிமாவில் கதாநாயகன் எம்.ஜி.ஆர். தனித்த புகழுக்கும் அந்தஸ்துக்கும் உரியவராக மாற்றப்பட்டார் ; மாறினார்.

1949 -ல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடையும் காலத்தில் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வளர்ச்சியும் அதனுடன் இணைக்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற பின்னர், கிராமங்களில் மின்சார வசதி பெருகி சினிமா பிரவேசிக்கத் தொடங்கியபோது தாங்கள் கர்ண பரம்பரையாகக் கேட்டு வந்த ராமன் அர்ச்சுனன், ஆகியோருக்கு இணையான மாவீரராகவும் ஏழை மக்களின் நண்பராகவும் எம்.ஜி.ஆரைத் திரையில் கண்டு கிராம மக்கள் துள்ளிக் குதித்தார்கள். மெய்சிலிர்த்தார்கள்.

கிராமப்புற ஏழை மக்கள், நகர்ப்புற வறிய மக்கள் தொழிலாளர்கள் மத்தியில் மனம் கவர்ந்த நாயகனாக எம்.ஜி.ஆர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். இதனால் எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் மரணமடைவதாகக் காட்டப்படுவதைக் கூட மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எம்.ஜி.ஆரின் பாத்திரங்கள் மிகக் கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டு நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. மக்களின் ஏகோபித்த கதாநாயகனாக தலைவராக உச்சியில் நிறுத்தப்பட்டார். எம்.ஜி ஆருக்கென்று ரசிகர் பெருங்கூட்டம் உறுதியாகி வளர்ந்து வர, 'அகில உலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம்' நிறுவப்பட்டது. குக்கிராமங்கள் எங்கும் பரவி தமிழகத்தையும் கடந்து, அனைத்துத் தமிழ் பேசும் மக்களையும் எம்.ஜி.ஆர் எனும் நாமம் ஈர்த்தது. ஈர்க்கப் பண்ணியது.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகி அ.தி.மு.க. எனும் புதிய கட்சியை உருவாக்கி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகப் பரிணமித்தார். 1977 ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் பொறுப்பேற்றார்.

தமிழகத்தின் முதன்மை அரசியல் சக்தியாக தலைவராக முதலமைச்சராக என பல நிலைகளில் வளர்ந்து செல்லும் போக்கு உருவாயிற்று. இது 1987 டிசம்பர் 24 வரை நீடித்தது. அவரது இறப்புக்குப் பின்னரும் எம்.ஜி.ஆர். தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார். அவ்வளவுக்கு எம்.ஜி.ஆர். புகழ் ஓர் ஈர்ப்பு சக்தியாக மாற்றப்பட்டுள்ளது. மாறியுள்ளது.

சினிமா ஊடகத்தின் ஒர் தன்னிகரற்ற நபராக வெகு மக்களின் ஏகோபித்த தலைவராக வளர்ந்த எம்.ஜி.ஆர் தமிழக அரசியலின் தவிர்க்கப்பட முடியாத மிகப் பெரும் சக்தியாக மாறினார். எம்.ஜி.ஆர். கால ஆட்சி தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தகைய மாற்றங்களை வளர்ச்சிகளை சிக்கல்களை பிரச்சினைகளைக் கொண்டமைந்தன என்பது குறித்து விரிவாக ஆராய வேண்டிய காலகட்டத்தை நெருங்கி விட்டோம். இது தவிர்க்க முடியாமல் திராவிட இயக்கக் கருத்து நிலையின் சிதைவாக்கமும் காலத் தேவை கருதி அது மாற்றமுறும் போக்குகள் குறித்தும், இன்றைய காலகட்டத்தில் திராவிடக் கருத்துநிலை அதன் இயக்கச் செயல்பாட்டின் பொருத்தப்பாடு குறித்த மீள் நோக்கினையும், பார்வையையும் வலியுறுத்தும் காலமாகிவிட்டது.

ஆகவே, எம்.ஜி.ஆர். வெறும் நபர் மட்டுமல்ல. ஓர் குறித்த காலத்தின் அரசியல் குறியீடு. வெகுசன ஊடகம் கட்டமைத்த 'அவதார புருஷர்' , 'ஏழைப்பங்காளர்' , 'நல்லவர் வல்லவர்'. இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்பது குறித்து ஆராயப் புகும் பொழுது சுவாரசியமான பல்வேறு ஆய்வுகளை நோக்கி நம்மைத் திசை திருப்பும்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தைப் பல்வேறு நோக்கு ரீதியில் விமரிசனம் செய்ய முடியும். அதற்கான முழுச் சாத்தியங்களும் உண்டு. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலமும் சரி எவருடைய ஆட்சிக் காலமும் சரி 'தேனும் பாலும்' ஓடிய ஆட்சிக் காலங்கள் அல்ல. ஆனால், அவரவர் தம் பங்குக்குச் சில நல்ல காரியங்கள் செய்துதான் உள்ளனர். இதுதான் பின்வரும் காலத்தில் அவர்களை நினைவுபடுத்துகிறது.

எம்.ஜி.ஆர். காலத்திலும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. அவ்வாறான நோக்கில் பார்க்கும் பொழுது இவை நிச்சயம் மதிப்புப் பெறக் கூடியவையே.

* எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரச ஆணையைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினார்.
* சத்துணவுத் திட்டம்
* உயர்கல்வி வளர்ச்சி குறிப்பாக பல்கலைக் கழகங்கள் பல உருவாக்கப்பட்டவை.
* ஈழத் தமிழர் போராட்ட எழுச்சிக்குத் தமிழக ஆதரவை வழங்க முன்னின்றமை.

இவை யாவும் எம்.ஜி.ஆர் வரலாற்றில் தேடிப் பார்த்த உருப்படியான வேலைகள். இவை வரலாற்றில் கவனிப்புப் பெறக் கூடியவை.

எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனையைப் பெரியார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வந்தார். பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மாநாடுகளிலும் விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அமுல்படுத்துவதில் பல்வேறு தடைகள் இருந்துகொண்டேயிருந்தது.

எம்.ஜி.ஆர். தனது ஆட்சிக்காலத்தில் எழுத்துச் சீர்திருத்தம் அமுல்படுத்துவதற்கான அரச ஆணையைப் பிறப்பித்து நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டார். அப்போது 'முரசொலி' நாளேடு எழுத்துச் சீர்திருத்தத்தைப் பின்பற்றத் தயங்கியது. ஆனால், 'தினமணி' நாளிதழ் சீர்திருத்தத்தைத் தயங்காமல் பின்பற்றத் தொடங்கியது. பின்னர், அதுவே பொது வழக்கமாக மாற்றம் பெறத் தொடங்கியது.

இன்று கணனித் தேவைகளுக்கு ஏற்ப தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்கு சாதகச்சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், எம்.ஜி.ஆரின். முயற்சியினால் தான் அது சாத்தியப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டம் அமுல்படுத்தலினால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பலர் நன்மை பெற்றனர். இது பல்வேறு ஊழல்களுக்கு வழியமைத்தது என்பது வேறு. ஆனால், இத் திட்டம் கிராமப்புறங்களில் பலத்த வரவேற்பைப் பெற்ற திட்டம். யுனிசெஃப் போன்ற நிறுவனங்களே இத் திட்டத்தை வரவேற்றன. இந்திய அளவிலும் இத் திட்டத்துக்கு வரவேற்பிருந்தது.

உயர்கல்வி பல்கலைக் கழகங்கள் உருவாக்கம் வளர்ச்சியில் அதிகம் அக்கறை செலுத்தியுள்ளார். இவரது காலத்தில் அண்ணா, அன்னை தெரசா, பாரதியார், பாரதிதாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், அழகப்பா, மருத்துவப் பல்கலைக் கழகம் (எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) என பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இவை உயர் கல்வி வளர்ச்சியில் பெரும் தாக்கம் செலுத்துவதற்குச் சவாலாக அமையும். ஆனால், இவை அதனைச் சாதித்துள்ளனவா என்பது வேறு விஷயம்.

அடுத்து, ஈழத் தமிழர் போராட்டத்துக்கு மிகுந்த ஆதரவை வழங்கியதோடு அல்லாமல் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைக்கும் குறியீடாகத் தமிழகம் இருப்பதை உணர்ந்து செயல்பட்டால், இதற்கு உள்நோக்கங்கள் வேறு இருக்கலாம். அது வேறு. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு ஓர் நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டுமென்ற ஆர்வத்துக்கு ஆதரவாகவும் இருந்துள்ளார். இலங்கை - இந்தியா ஒப்பந்தம் சாத்தியப்படுவதற்கும் காரணமாகயிருந்துள்ளார்.

இவற்றின் மூலம் தமிழக வரலாற்றில் தமிழர் மத்தியில் எம்.ஜி.ஆர். நினைக்கப்படும் மனிதராகவே இருக்கின்றார்.

நிலவும் நடப்புச் சமூக அரசியல் வரலாற்று நிலைக்குள்ளிருந்து நாம் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது எம்.ஜி.ஆர். குறித்த மேலோட்டமான பார்வை இது. இன்னும் பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து பன்முக ரீதியில் அறிவியல் நிலைப்பட்ட ஆய்வு நோக்கில் பார்க்கும் பொழுது தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல், உளவியல் வெகுசன ஊடகம் என பரந்து விரிந்த தளத்தை நோக்கி ஆய்வு விரியும்.

January 15, 2009

காணொளி: நாகூர் ஈ.எம். ஹனீபா வழங்கும் "தமிழுக்கு அமுதென்று பேர்"

பாவேந்தர் பாரதிதாசன் வடித்த ~ தமிழுக்கு அமுதென்று பேர் ~ பாடுபவர் கலைமாமணி நாகூர் ஈ.எம். ஹனீபா:

மிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! - பாவேந்தர் பாரதிதாசன்

நாகூர் ஈ.எம். ஹனீபா

சைமுரசு, அருளிசை அரசு, கலைமாமணி முதலிய பட்டங்களைக் குவித்துள்ள ஈ.எம்.ஹனீபா இசுலாமிய மெல்லிசையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து வருகிறார். இற்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் முகவை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு நாகூரே இளமை முதல் வாழிடமாக அமைந்து விட்டது. காரைக்கால் ஏ.எம்.தாவுது போன்றோர்களின் இசையரங்க நிகழ்ச்சிகளைக் கேட்டதனால் இளமை முதலே எழுச்சி பெற்றுப் பாடி வருகிறார். நுண்ணுணர்வும் கேள்வியறிவும் நிரம்பவுடைய இவருக்கு முறையான இசைப் பயிற்சி தேவைப் படவில்லை. 70 அகவைக்குப் பிறகும் இவருக்கே இயல்பான குரல் வளமும் தெளிவான தமிழ் ஒலிப்பும் சற்றும் குறையாமை வியப்புக்குரிய ஒன்று.

ஹாங்காக், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் இசை மழை பொழிந்துள்ளது இவ்வின்னிசைக் கொண்டல். நாளும் இன்னிசையால் நபிகள் புகழையும், திருக் குர்ஆனையும், திராவிட இயக்கத்தையும் பரப்பி வரும் இவர்தம் இசையரங்குகள் பொதுக் கூட்டங்களிலும், இல்லச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மிகுதியாக இடம் பெறும். இவர் பாடலிலும் மரபுபிறழாத உருப்படிகள் உண்டு. மெல்லிசைப் பாடல்களும் கர்னாடக இசை மரபின் சாயல் மிகுந்தவையே.

கழகம் இட்ட கட்டளைப் படிக் கைத்தறித் துணியை விற்ற போதும், சிறைப் பறவையாய் வாழ்ந்த போதும் பாடும் பணியே பணியாய் இருந்தார்.

பேரறிஞர் அண்ணா , காயிதே மில்லத் ஆகியோர் விரும்பிக் கேட்ட பெருமையுடைய பாடல் இவருடையது. இவர்தம் 'இறைவனிடம் கையேந்துங்கள் - அவன் இல்லை என்று சொல்லுவதில்லை' , 'அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா ' முதலிய பெயர் பெற்ற பாடல்கள் 500க்கு மேற்பட்ட இசைத் தட்டுகளிலும் ஒலிநாடக்களிலும் பதிவாகி தமிழ்கூறு நல்லுலகம் எங்கும் இனிது ஒலித்து வருகின்றன. [நன்றி: முனைவர் இரா. திருமுருகன்
நன்றி: ஆபிதீன் வலைத்தளம்]

January 13, 2009

காணொளி: "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்"

ழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

January 10, 2009

தொடர் கொலைகளின் சோகத்தினை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இலங்கை ஊடகத்துறை

"த்திரிகைச் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமைவதற்கு ஊடகத்துறையினர் மீதான வன்முறைகள், படுகொலைகள் என்பன வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது வீரகேசரி பத்திரிகை.

தொடராக தமது சகாக்களின் பிரிவுத்துயர் தணியும் முன்பே இன்னொரு கொலையின் சோகத்தையும் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இலங்கையில் ஊடகத்துறை உள்ளது.

Media freedom under threat

மேலும் படங்கள்: International Relations and Tamil's Affairs Group (IRTAG)

அச்சுறுத்தல்களுக்கு உள்ளாயிருக்கும் பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப் பட்டாலேயே, நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டி இலங்கையின் முதன்மை தமிழ் செய்தி இதழ் வீரகேசரியின் ஜனவரி 11ஆம் திகதிய வார வெளியீட்டின் ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ண்டே லீடர் பத்திரிகையின் பிரதம பொறுப்பாசி?யரும், பிரபல ஊடகவியலாளருமான லசந்த விக்கிரமதுங்க கடந்த வியாழக்கிழமை (08.01.2009) காலை கல்கிஸ்ஸ அத்திட்டிய பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளின் குண்டுகளால் மௌனமாக்கப்பட்டுள்ளார்.

லசந்த படுகொலை செய்யப்படுவதற்கு இருதினங்களுக்கு முன்னர் அதாவது 06.01.2009 திகதியன்று பன்னிப்பிட்டிய, தெப்பானமவிலுள்ள மகாராஜா நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத ஆயுதக் கும்பலொன்று பேரழிவுகளை ஏற்படுத்திச் சென்றுள்ளது.

2009ஆம் ஆண்டு புது வருடத்தின் ஒரு சிலதினங்களுக்குள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஊடகத்துறை சார்ந்தோரை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. வழமைபோல் ஊடகத்துறை சார்ந்தோர், வெளி நாட்டுத் தூதரகங்கள் அரசியல் வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் என பல தரப்பினரிடம் இருந்தும் அடுக்கடுக்காக அனுதாபங்களும் கண்டன அறிக்கைகளும் குவிந்த வண்ணமுள்ளன.

ஊடகத்துறை சார்ந்தோரும், அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் லசந்த விக்கிரமதுங்க, எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனத் தாக்குதல்குறித்து கண்டனங்களையும் எதிர்ப்பையும் தெரிவிக்கு முகமாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், ஊர்வலத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படும்போது, தாக்கப்படும் போது, பயமுறுத்தப்படும் போது, படுகொலை செய்யப்படும் போது மேற் கூறியவாறு கண்டன அறிக்கைகள் குவிவதும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் கூட்டங்கள் நடத்தப்படுவதும் வழமையான சம்பிரதாய சடங்குகளாகப் போய்விட்டன.

ஆனால், இத்தகைய கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் வரலாற்றில் வெறும் பதிவுகளாகவே உள்ளன. ஊடகத்துறையினருக்கெதிராகத் தொடரும் வன்முறைகளை, பயமுறுத்தல்களை, படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமையை ஊடகத்துறையினருக்கு இவை வழங்கத் தவறிவிட்டன.

அதேபோல், ஊடகத்துறையினருக்கு எதிரான சம்பவங்களுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தப் போவதாகக் கூறுவதும் தொடர்ந்தும் "வாய்ப்பாட்டுச் செய்தி" யாகவே உள்ளது என்பதும் கசப்பான உண்மையும், வேதனை தரும் விடயமுமாகும். ஊடகத்துறையினருக்கெதிராகத் தொடரும் வன்முறைகளே மேற்கூறியவைகளுக்குச் சாட்சியாகும். ஊடகவிய லாளர் ரிச்சட் டி சொய்சா படுகொலையில் இருந்து தொடரும் உண்மை நிலை இதுவாகும்.

1990 ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ரிச்சட் டி சொய்சா சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொழும்பில் காலி முகத்திடலில் கே.எஸ். ராஜா சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் 1999ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி நடராஜா அற்புதராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி மயில் வாகனம் நிமலராஜன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் 2004 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16 ஆம்திகதி பால நடராஜா ஐயர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கொழும்பில் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி பிரபல ஊடகவியலாளர் தர்மரட்னம் சிவராம் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி சுப்ரமணியம் சுகிர்தராஜனும் அதே ஆண்டில் ஒகஸ்ட் 27ஆம் திகதி சின்னத்தம்பி சிவமகாராஜாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொழும்பில் வைத்து 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி றேலங்கி செல்வராஜாவும் 2006 ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி லக்மல் சம்பத்தும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 2006 ஆம் ஆண்டு மே 2 இல் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

யாழில் தேவகுமார் 2008ஆம் ஆண்டு மே 28ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். வவுனியாவில் சுதாகரனும் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். தற்போது சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம பொறுப்பாசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தொடராக தமது சகாக்களின் பிரிவுத்துயர் தணியும் முன்பே இன்னொரு கொலையின் சோகத்தையும் சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இலங்கையில் ஊடகத்துறை உள்ளது.

ஆரம்பத்தில் பெரும்பாலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது படிந்த "இனந்தெரியாதோரின் கொலைக் கரங்கள்'' இன்று ஒட்டு மொத்த ஊடகத்துறை மீதும் படிந்து உயிரைக் குடிக்கத் தொடங்கியுள்ளது.

அதேபோல் பயறுத்தல், வன்முறை என்பனவும் இனம், மொழி, மதம் கடந்து அனைத்து ஊடகவியலாளர்கள் மீதும் "இனந்தெரியாத மறைந்த கரங்கள்'' பரவிவருகின்றன.

பத்திரிகைச் சுதந்திரம் அர்த்தமுள்ளதாக அமைவதற்கு ஊடகத்துறையினர் மீதான வன்முறைகள், படுகொலைகள் என்பன வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டும். பயம், பீதி, அச்சுறுத்தல் போன்றவற்றில் இருந்து விடுபட்டு பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்றுவதற்கு அனைத்து மட்டங்களைச் சேர்ந்தவர்களும் வழிசமைக்கவேண்டும்.

இன்றைய நிலையில் இன்று லசந்த நாளை யார்? என்ற கேள்விகளுடன் பலிக்கடாக்களாக பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில்தான் ஊடகத்துறை இலங்கையில் உள்ளது.

ஊடகத்துறை தொடர்ந்தும் தமது சகாக்களை இழந்து கொண்டிருக்க முடியாது. இத்தகைய செயல்கள் தொடருமாயின் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். ஆகவே ஜனநாயகம் காப்பற்றப்பட வேண்டுமாயின் ஊடகத்துறை காப்பாற்றப்பட வேண்டும்.

January 09, 2009

நடேசன்: 'நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு'

"ங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு," என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், தமிழக நாளேடு தினமணியின் ஜனவரி 10ஆம் திகதிய இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

தினமணியின் கேள்விகளுக்கு திரு. நடேசன் அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு:

PN0109.jpgகேள்வி: மக்கள் யாரும் இல்லாத, வெறிச்சோடிக் கிடந்த கிளிநொச்சியைத்தான் இலங்கை ராணுவம் பிடித்துள்ளது என்கிறார்களே, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கிளிநொச்சியிலிருந்து அழைத்துச் செல்லும் பணியை எவ்வளவு நாட்களாக செய்தீர்கள்?

பதில்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை தமிழ் மக்கள் சந்தித்து வருகிறார்கள். அதுபோன்ற நேரங்களிலும் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக உடுத்திய உடையோடு, எல்லா உடைமைகளையும் விட்டுவிட்டு, இடம்பெயர்ந்த வரலாறு பல உண்டு. வன்னி நிலப்பரப்பில் ராணுவ நடவடிக்கையை எங்கள் மக்கள் சந்திப்பதும் இது முதல் தடவையல்ல. இலங்கை ராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் சிங்களப் படையினர் எத்தகைய சித்திரவதைகள், படுகொலைகள், கற்பழிப்புகள் செய்வார்கள் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆகவே ராணுவம் எப்போது வரும்? எவ்வாறு வரும்? என்பதை எங்கள் மக்கள் நன்கு அறிவார்கள். அதற்கேற்ப இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிரு நாட்களுக்குள்ளேயே முழு உடைமைகளுடனும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த சகல உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.

கேள்வி: அவர்கள் காடுகளில் தங்கியுள்ளதாகவும், உடல் நிலை மோசமாகி தினமும் பலர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறதே, அது உண்மையா?

பதில்: இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தியுள்ளோம். சிறு கிராமங்கள், காடுகள் என எல்லா இடங்களிலும் குடியேற்றியுள்ளோம். இலங்கை அரசின் பொருளாதாரத் தடை காரணமாக மருந்துப் பொருட்கள் கிடைக்கவில்லை. எனவே பாம்புக் கடிகள், தொற்றுநோய்கள் என எல்லா கொடுமைகளையும் எமது மக்கள் சந்தித்து வருகின்றனர். மிகவும் சிரமப்பட்டு அவர்களை பாதிப்பிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடில்களில் வசிக்கிறார்களா? வெட்ட வெளியில் உள்ளார்களா? அவர்களுக்கு உணவு, உடை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை எவ்வாறு அளித்து வருகிறீர்கள்?

பதில்: ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது குடிசைகளிலும், தாற்காலிக கூடாரங்களிலும், மர நிழல்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குப்பி விளக்குகளிலும், காட்டில் நெருப்புகளை மூட்டியும் மக்கள் தமக்கு வேண்டிய வெளிச்சத்தைப் பெறுகின்றனர். தாற்காலிக கிணறுகள், குளங்களிலிருந்து எடுக்கப்படும் நீரை, எமது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்படி கொதிக்க வைத்து பருகி வருகின்றனர். உணவைப் பொறுத்தமட்டில், ஐ.நா. சபையின் உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உணவுகளையும், உள்ளூர் உற்பத்திகளில் சேகரித்து வைத்த உணவுகளையும் உண்டு வருகின்றனர். பெரிய சிரமங்களுக்கும், சவால்களுக்கும் மத்தியில் எங்கள் மக்கள் உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர்.

கேள்வி: கிளிநொச்சியில் தற்போது கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகக் கிடக்கின்றன. மின்சாரம், குடிநீர் விநியோகம் எதுவும் இல்லை. கிளிநொச்சியை காலி செய்யும் முன் நீங்களே அழித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறதே. இது உண்மையா?

பதில்: இது முற்றிலும் பொய்யான பிரசாரமாகும். இலங்கை விமானப் படையின் குண்டு வீச்சுக்களாலும், ஷெல் (பீரங்கிக் குண்டு) வீச்சுக்களாலும் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது நன்றாகப் புரியும்.

கேள்வி: தமிழ் மக்கள் கிளிநொச்சியை விட்டு முன்னரே வெளியேறி விட்டார்கள் என்றால், தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாருக்கு போய்ச் சேர்ந்தது?

பதில்: முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சியை ஒட்டிய பிரதேசங்களில், மக்கள் இடம்பெயர்ந்து சென்று வாழ்கின்ற இடங்களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. எமது பிரதேசத்தில் இயங்குகின்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் எங்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அந்நியோன்னியமாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எளிதாக விநியோகிக்க முடிகிறது.

கேள்வி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், அவர் விரைவில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார் என்றும் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. உண்மை நிலை என்ன?

பதில்: அவர் மிகவும் தேக ஆரோக்கியத்துடன் இருந்து போராட்டத்தை வழிநடத்தி வருகிறார். இலங்கை அரசுக்கு ஆதரவான ஊடகங்களே இவ்வாறு பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கேள்வி: இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் உதவி வருவதாகக் கூறப்படுவது உண்மையா?

பதில்: பல ஊடகங்கள், குறிப்பாக கொழும்பு ஊடகங்கள் இவ்வாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

கேள்வி: கிளிநொச்சியை மீண்டும் மீட்போம் எனக் கூறுகிறீர்கள். கிளிநொச்சியிலிருந்து இலங்கை ராணுவத்தை விரட்டுவது அவ்வளவு எளிதானதா?

பதில்: இங்குள்ள தமிழ் மக்கள் அனைவரும் எங்களுடன் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழ் இனத்தின் தார்மிக ஆதரவும் எங்களுக்கு உள்ளது. இதுவே எங்கள் பலம். இந்த பலத்தின் மூலம் நாங்கள் இழந்த ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: இலங்கை இனப் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகளின் அணுகுமுறை மற்றும் செயல்பாடு குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில்: எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அரசியல் மாறுபாடுகளை மறந்து, குரல் கொடுப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், எழுச்சியையும் கொடுக்கின்றது.

கேள்வி: இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து தங்கள் கருத்தென்ன?

பதில்: இந்திய அரசினுடைய, இந்திய மக்களுடைய வரலாற்று ரீதியான நண்பர் யார்? பகைவன் யார்? என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள்தான் இந்தியாவின் வரலாற்று ரீதியான நண்பன் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுக்கு நம்பிக்கைக்குகந்த நண்பனாக இலங்கை அரசு என்றைக்குமே நடந்து கொள்ளவில்லை. இதற்குப் பல்வேறு ஆதாரங்களைக் கூறமுடியும்.

கேள்வி: போர் நிறுத்த உடன்படிக்கை முறிய விடுதலைப் புலிகளே காரணம் என இங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கூறி வருவது உண்மையா?

பதில்: போர் நிறுத்த உடன்படிக்கை முறிந்ததற்கு இலங்கை அரசே காரணம். போர் நிறுத்தத்திலிருந்து விலகுவதாக அவர்கள்தான் முதலில் அறிவித்தனர். நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. இப்போதும் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று உருவானால் அதனை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்னைக்கு எத்தகைய தீர்வை எட்ட முடியும் என நம்புகிறீர்கள்? அதற்குத் தங்களிடம் எத்தகைய திட்டம் உள்ளது?

பதில்: எமது மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவு செய்யக்கூடிய அரசியல் தீர்வினையே நாங்கள் விரும்புகின்றோம். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் வழியாகவே இனப் பிரச்னைக்கான தீர்வை காண முடியும் என கூறி வரும் நேரத்தில், இலங்கை அரசு எங்கள் மீது தடை விதித்துள்ளது. இலங்கை அரசு ராணுவத் தீர்வை நோக்கிச் செல்கின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

இது சிங்கள அரசின் அப்பட்டமான தமிழின விரோதப் போக்கிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

January 08, 2009

வீரகேசரி: 'லசந்த விக்கிரமதுங்கவின் இழப்பு ஓர் நிரந்தர வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது'

சந்த விக்கிரமதுங்க தனது கருத்துக்களை சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் எழுதக்கூடிய ஒருவராக விளங்கினார். அவரது இழப்பு இந்நாட்டின் ஊடகத்துறையினர் மத்தியில் மாத்திரமன்றி பரந்துவாழும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதேவேளை கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது, என கொழும்பிலிருந்து வெளிவரும் முதன்மை தமிழ் நாளிதழாகிய வீரகேசரி ஜனவரி 9ஆம் திகதிய ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

LW0108.JPG

லசந்த விக்கிரமதுங்க

அவ் ஆசிரியத் தலையங்கம் முழுவதுமாக:

லங்கையின் ஊடகத்துறை மிகவும் சவால் மிக்க ஒன்றாக மாறிவருவது ஊடகவியலாளர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் தோற்றுவித்துள்ளது. ஊடகங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகுதல், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் சர்வதேச ரீதியில் இலங்கையின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவது தொடர்பில் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் மேற்கொள்ளப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மிகுந்த கண்டனத்தையும் அதிர்ச்சியையும் வெளியிட்டு வருகின்றன. அத்துடன் சர்வதேச சமூகமும் இத்தகைய செயல்களை வன்மையாக கண்டித்துள்ளது. எவ்வாறெனினும் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல்கள் எந்தவகையிலும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் இலங்கையின் பிரபல ஆங்கிலப்பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கும் சண்டேலீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான லசந்த விக்கிரமதுங்க நேற்றுக்காலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுடப்பட்டு ஆபத்தான நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கல்கிசை அத்திடிய வீதியில் வைத்து இவரது காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறிப்பாக லசந்த விக்கிரமதுங்க தனது கருத்துக்களை சுதந்திரமாகவும் துணிச்சலாகவும் எழுதக்கூடிய ஒருவராகவே விளங்கினார்.

அவரது இழப்பு இந்நாட்டின் ஊடகத்துறையினர் மத்தியில் மாத்திரமன்றி பரந்துவாழும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் பெரும் கவலையையும் அதேவேளை கண்டனத்தையும் தோற்றுவித்துள்ளது.

அத்துடன் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், புத்திஜீவிகள் என பல்வேறு தரப்பினரும் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளனர். தேசிய ஊடகமொன்றின் பிரதம பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டமை இதுவே முதற்றடவையாகும். எவ்வாறெனினும் லசந்த விக்கிரமதுங்கவின் இழப்பானது ஓர் நிரந்தர வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எந்தவகையிலும் மறுப்பதற்கில்லை.

இதேவேளை சிரச ஊடக நிறுவனம் கடந்த 6ஆம் திகதி அதிகாலை இனந்தெரியாத ஆயுததாரிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றாக சேதமடைந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்தும் மக்கள் விடுபட முன்னர் இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனை சாதாரண பொதுமக்கள் உட்பட அனைத்துத்தரப்பினருமே கண்டித் துள்ளதுடன் தங்கள் கவலையையும் வெளியிட்டுவருகின்றனர்.

ஊடகவியலாளர்களைப் பொறுத்தமட்டில் பல்வேறுபட்ட கஷ்டங்களுக்கு மத்தியிலும் எந்தவித லாபமும் கருதாது மக்கள் சேவையை கருத்தில் கொண்டே செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறானதோர் சூழலில் வெறுமனே எழுந்தமானமாக ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பன மனோரீதியாக அவர்கள் மத்தியில் அச்ச உணர்வையே மேலோங்கச் செய்துள்ளன.

உண்மையில் இதனை யார் செய்தார்கள்? என்ன நோக்கத்தின் அடிப்படையில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பவை அனைத்தும் மர்மமாகவே உள்ளன. இத்தகைய சம்பவங்கள் மென்மேலும் தொடருமானால் சர்வதேச ரீதியில் இலங்கை தொடர்பில் தவறான அபிப்பிராயங்களே மேலோங்குவதாக இருக்கும். ஊடகவிலயாளர்களதும் ஊடக நிறுவனங்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஊடகவியலாளர்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் மேற்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க சகல தரப்பினரும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும். ஜனநாயக நாடொன்றில் ஊடகத்துறையை பாதுகாப்பதும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதும் மிகவும் இன்றியமையாததாகும்.

இதுவரை ஊடகவியலாளர்கள் பலர் வெறுமனே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இத்துறை மிகவும் ஆபத்து மிக்கதொன்றாக மாறிவருவதுடன் கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலைமை மேலும் தொடராதிருப்பதற்கு சாத்தியமான நடவடிக்கை எடுப்பது மிகவும் அத்தியாவசியமென்பதை சகல தரப்பினரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

எதிர்வரும் காலத்திலேனும் இவ்வாறான துயரச் சம்பவங்கள் தொடராதிருப்பதை உறுதி செய்வது மிகவும் அத்தியாவசியமாகும்.

January 07, 2009

கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக துணைச் செயலாளர் சி. மகேந்திரன்: 'இந்திய அரசின் பதில் என்ன?'

SM0107.jpgந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன், ஜனவரி 8ஆம் திகதி, தமிழக நாளேடு தினமணியில் "இந்திய அரசின் பதில் என்ன?" என்று தலைப்பிட்டு எழுதியுள்ள ஆசிரியத் தலையங்கப் பக்க கருத்து கட்டுரை:

கிளிநொச்சி வீழ்ந்ததைப் பற்றியும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிடிபடப் போகிறார் என்பதைப் பற்றியும் பரபரப்பாக பேசுவதை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு, யுத்தத்தின் மறுபக்கத்தை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியமானதாகும். போரில் நேரடியாக ஈடுபடுபவர்களை விட பொது மக்கள் அடையும் துயரம் வார்த்தைகளால் சொல்லி மாளாது. ஆகாயத்திலிருந்து கொட்டப்படும் குண்டுகளிலிருந்து உயிர் காத்துக் கொள்ள முயற்சிக்கும் போராட்டம் இவர்களுக்கு.

ஒரு லட்சம் மக்கள் கிளிநொச்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்ற செய்தி பலருக்கு நம்ப முடியாததாக இருக்கிறது. இவர்கள் அனைவரும் மனித கேடயத்திற்காகப் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் பரப்பப்படுகிறது. புலிகளுடன் இணைந்து செல்வது என்பது இவர்களுக்குத் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

போர் நிறுத்தம், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு ஆகிய இரண்டும் தான் இன்றைய இலங்கையின் தேவை. தமிழ் மக்களின் உயிருக்கும், தொன்மைமிக்க பண்பாட்டு வாழ்க்கைக்கும் ஒரு பேரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையானதோ, அவ்வளவு உண்மை, சிங்கள மக்களின் எதிர்காலமும் இந்த போர் மூலம் நாசப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும். இலங்கையின் இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, ராணுவத்திற்காக மட்டுமே தொகை ஒதுக்கிய பட்ஜெட்டாக அமைந்துவிட்டது.

மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 20 சதவீதத்தை ராணுவத்திற்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது இலங்கை ரூபாயில் 17 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இன்றைய உலகில் இத்தகைய பெரும் தொகையை ராணுவத்திற்கு எந்த நாடும் ஒதுக்கியதில்லை. அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா, இந்தியா, ஈரான் முதலான நாடுகள் இலங்கையுடனான ஆயுத வியாபாரத்தில் பெருந்தொகையைப் பெற்றுவிட்டன.

இதைத் தவிர, பெரும் எண்ணிக்கையில் இலங்கை ராணுவத்தினர் இறந்த பிறகும், சிங்களர் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒருவரை இலங்கை ராணுவத்திற்குத் தர வேண்டும் என்று அண்மையில் அதிபர் ராஜபக்ஷ வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் தனி ஆட்சி நடத்திய தமிழ் மன்னர்களின் மீது பகைமை கொண்டு படை திரட்டிய சிங்கள அரசர்களின் வெறிச் செயலைத்தான் இது நமக்கு நினைவுபடுத்துகிறது.

இலங்கை ராணுவத்தின் இன்றைய நெருக்கடியை, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மங்கல சமரவீர தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்படி கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் என்றும் ஊனமுற்றவர்கள் 25 ஆயிரம் பேர் என்றும் தெரிகிறது. அண்மையில் வெளியாகியுள்ள ஒரு தகவல் பெரிதும் நம்மை யோசிக்க வைக்கிறது. படைமுனையில் போர் புரியும் ராணுவ வீரர்களுக்கான சம்பளத்தைக்கூட இலங்கை அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை என்பது தெரிகிறது.

இப்பொழுது மீண்டும் 37 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்த்திருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தின் சார்பில் போரில் பங்கேற்று இறந்து கிடப்பவர்களைப் பார்த்தால் அனைவரும் பள்ளி மாணவர்களைப் போலவே தோற்றத்தில் காணப்படுகிறார்கள். இவர்களில் மூன்று ராணுவ வீரர்களின் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வயது 17 என்று இணையதளங்களில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அனைத்து தகவல்களையும் தொகுத்துப் பார்த்தால், தமிழ் மக்களை அழிப்பதுதான் யுத்தத்தின் நோக்கமாகத் தெரிகிறது. இலங்கை விடுதலை அடைந்த போது சிங்கள மக்களின் எண்ணிக்கை 70 லட்சம் என்று கூறப்பட்டது.

தமிழ் மக்களின் அன்றைய மக்கள்தொகை 35 லட்சம். இதில் மலையகத் தமிழர்களும், முஸ்லிம் தமிழர்களும் அடங்குவார்கள். இன்று இலங்கையில் சிங்கள மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சம். அதேநேரத்தில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் எண்ணிக்கை 35 லட்சம் என்று கூறப்படுகிறது.

60 ஆண்டுகளில் சிங்கள மக்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காகப் பெருக்கம் அடைந்துள்ளபோது, தமிழ் மக்களின் எண்ணிக்கை ஏன் பெருக்கம் அடையவில்லை? இதில் அடங்கியுள்ள இன அழிப்பு கொள்கையை எப்படி நம்மால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும்?

இதைத் தவிர, இன்றைய இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ராணுவத்தால் தேசத் துரோகிகளாகக் கருதப்படுகிறார்கள். 25 ஆயிரத்துக்கு அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். இரவு பகல் என்று பாராமல் ராணுவம் நடத்தும், இடைவிடாத சந்தேக வேட்டையில் தமிழ் குடும்பங்கள் முற்றாக தங்கள் நிம்மதியை இழந்துவிட்டனர். மக்களில் பெரும் எண்ணிக்கை, ஒன்று ராணுவப் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது திறந்தவெளி சிறைச்சாலையைப் போன்ற அகதி முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதை விடவும் மற்றொரு மனித நேயமற்ற செயலும் நடந்துள்ளது. இந்திய அரசின் மூலம் தமிழக அரசால் அனுப்பப்பட்ட பொருள்கள்கூட, இலங்கைத் தமிழக மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை. உணவுப் பொருள்களில் ஒரு பகுதி திருட்டுப் போய்விட்டதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தமிழக மக்கள் அனுப்பிய உணவுப் பொருள்களையே திருடி எடுத்துக்கொண்டவர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளைத் தரப்போகிறார்கள் என்ற கேள்வியையும் ஊடகங்களில் அங்குள்ள தமிழ் மக்கள் எழுப்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசின் மற்றொரு முகம் மிகவும் கொடூரம்மிக்கதாக இருக்கிறது. தமிழ் மக்களின் மீதான வான்வெளித் தாக்குதலை இது நடத்துகிறது. இதுவரை ஆறாயிரம் முறை குண்டுகள் போடப்பட்டுள்ளன. அடிப்படையான போரைத் தரையில் நின்று இலங்கை ராணுவம் நடத்தவில்லை. பன்னாட்டு ராணுவத்தின் துணை கொண்டு வான்வெளித் தாக்குதலை நடத்துகிறது. விமானத்திலிருந்து போடப்படும் குண்டுகள் உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்டவை. கண்ணி வெடிகள் அபாயம் மிகுந்தவை. இவை மொத்தம் 10 லட்சம் பேரை கம்போடியாவில் மட்டும் கொலை செய்திருக்கிறது.

கண்ணி வெடியைப் போன்ற அபாயம் நிறைந்ததாகக் கருதப்படும் மற்றொன்றுதான் கொத்து வெடிகுண்டுகள் (கிளஸ்டர் குண்டுகள்). வானிலிருந்து பாராசூட்டுகள் மூலம் கீழிறக்கப்படும் இந்த குண்டுகள் ஒன்று நூறாகப் பிரிந்து வெடித்து மண், மரம், செடி, கொடிகளுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியவை. ஒரு குறிப்பிட்ட இனமக்களை அழிக்க, இந்த வகையாக குண்டுகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் காசா பகுதிகளில் இந்த குண்டுகள் போடப்பட்டுள்ளன. காற்றில் வெடித்து உரசி வெடிக்கக் கூடியவை இந்த குண்டுகள். வெடிக்காமல் கிடக்கும் குண்டுகள் பல ஆண்டுகள் காத்திருந்து மக்கள் உயிரை வாங்கும் அபாயத்தையும் தனக்குள் தேக்கி வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த கிளஸ்டர் குண்டுகளின் அபாயம் குறித்த ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி நார்வே தலைநகர் ஓஸ்லோவில் சிறப்புக் கூட்டம் நடந்துள்ளது. இதில் 122 நாடுகள், ""கிளஸ்டர் குண்டுகளை உற்பத்தி செய்வதும் இல்லை, விற்பனை செய்வதும் இல்லை'' என்று ஐ.நா.வின் வழிகாட்டுதலின்படி கையொப்பமிட்டுள்ளன. கொடுமைமிக்க கிளஸ்டர் குண்டுகள்தான் இலங்கைத் தமிழ் மக்களின் மீது பெரும் எண்ணிக்கையில் போடப்பட்டுள்ளது. எதிரிகளின் இலக்குகள் பற்றி கவலையில்லாமல் குண்டுகளைப் போடுதல் பொதுமக்களை அழிக்கும் நோக்கம் கொண்டதாகத்தான் இருக்க முடியும். தமிழ் மக்களைக் கொன்றும், ஊனப்படுத்தியும் மகிழ்ச்சியடையும் இந்த யுத்தம் மூலம் தமிழ் மக்களின் பூர்வ பிரதேசங்கள் எதற்கும் பயன்படாதவாறு குண்டுகளின் மூலம் நாசப்படுத்தப்பட்டுவிட்டது. மனிதனைப் போலவே மண்ணும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உயிரை இழந்து கொண்டிருக்கிறது.

உலகமயமும், தாராளமயமும் இன்று உலக இன அழிப்பு மயத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும், பாலஸ்தீனத்திலும் புகழ்மிக்க ஆதியினங்களின் அடையாளங்களை யுத்தத்தின் மூலம் அழிக்கும் முயற்சியில் இடைவிடாது ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. இலங்கைத் தமிழ் மக்களையும் இவ்வாறு அழிப்பதற்கு இதேபோன்று திட்டங்களைச் செயல்படுத்துகிறார்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுந்துவிட்டது. அமெரிக்கத் தளபதியுடன் இணைந்து இந்தியத் தளபதியும், பாகிஸ்தான் தளபதியும் வன்னிப்பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான போருக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் தமிழக மக்களை படுகொலை செய்யும் யுத்தத்தை இந்திய அரசு முன்னின்று நடத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைப் போக்க வேண்டிய கடமை மன்மோகன் சிங்குக்கு இருக்கிறது. இல்லாவிட்டால் தமிழகத்தின் 6 கோடி மக்களும் அவரை எதிர்காலத்தில் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர்ந்து கொள்ளுதல் அவசியமானதாகும்.

January 06, 2009

தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன்: "தமிழர்களுக்கு தாய் மொழி உணர்வு குறைவு"

மிழர்களுக்கு தாய் மொழி உணர்வு குறைவு என்று தமிழக நிதி அமைச்சர் க. அன்பழகன் வேதனை தெரிவித்தார்.

இப்படி சென்னையில் தொடங்கிய "உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, புலம் பெயர்ந்த தமிழர் சந்திப்பு -2009" மாநாட்டில் அவர் பேசியது தொடர்பாக ஜனவரி 7ஆம் திகதி, தமிழக நாளேடு தினமணியில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு:

மாநாட்டில் நிதி அமைச்சர் க. அன்பழகன் மேலும் பேசுகையில்:

மற்றவர்களைவிட தமிழர்களுக்கு தாய்மொழி உணர்வு குறைவு. தமிழர்கள் சிறுபான்மை யாக இருக்கும் இடங்களில் தாய் மொழி உணர்வோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் சீரழிந்த தமிழர்களாக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழர்களுக்கு, தமிழ் தலைவருக்கு இருக்க வேண் டிய மதிப்பு இல்லை. மலேசியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்க ளில் நல்ல தமிழில் பேசுகிறார்கள். ஜாதி, மத உணர்வுகள் அதிகமாகும் போது தமிழ் உணர்வு குறைந்து விடுகிறது. தமிழர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அங்கு வளமாக இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் விருப்பம்.

"நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ, அந்த நாட்டுக்கு உண்மையாக இருக்க வேண்டும்'' என்று அண்ணா ஒருமுறை மலேசியாவில் பேசினார். அதனை இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

முதன்முறையாக உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடக்கிறது. இதுபோன்ற மாநாடுகள் நமக்கு பின்னால் ஒரு சமூகம் இருக்கிறது என்ற பலத்தைக் கொடுக்கிறது என்றார் க. அன்பழகன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு: மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி யில் உள்ள அரசுகள் இருப்பதால் தமிழகம் மற்ற மாநிலங்களைவிட வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது. ஆனால் இந்தியா வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கும், நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமும் தான் காரணம்.

தற்போது உள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ள ப. சிதம்பரம் அத்துறை யிலும் முத்திரை பதிப்பார். இந்த மாநாட்டுக்கு வந்துள்ள தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.

அதற்கு மத்திய அரசு எல்லா வகையிலும் உதவ தயாராக உள்ளது என்றார்.

இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ஏ.ஆர். லட்சுமணன்: ஜவாஹர்லால் நேரு, தான் எழுதிய "டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலில் மூன்று பக்கங்களுக்கு நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வாணிபச் சிறப்பு பற்றி எழுதியுள்ளார்.

மலேசிய நாட்டுக்கு வங்கி முறையை அறிமுகப்படுத்தியது நகரத்தார்கள் தான் என்று நேரு எழுதியுள்ளார். இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நான் இந்தியா முழுவ தும் சுற்றுப் பயணம் செய்து வருகி றேன். தமிழகத்தைப் போல எந்த மாநிலமும் இந்தியாவில் வளர்ச்சி பெறவில்லை என்றார்.

கருணாநிதி வாழ்த்து: மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தியை தஞ்சை தமிழ் பல்க லைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வாசித்தார்.

மலேசிய முன்னாள் அமைச்சர்கள் டத்தோ எஸ். சாமிவேலு, டத்தோ வீரசிங்கம், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி ரிப்பேல், ஆஸ்திரேலிய தொழிலதிபர் மகாலிங்கம் சின்னத்தம்பி, மாநாட்டை நடத்தும் சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்ன வைக்கோ, கோவை பாரதியார் பல் கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம், தொழிலதிபர்கள் அபுபக் கர், வி.ஜி. சந்தோஷம் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

January 05, 2009

"கிளிநொச்சியை இழந்தது பின்னடைவு அல்ல" என்று பேசிக்கொண்டிருக்க இது தருணமல்ல

லங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்கள் ஓய்ந்துகொண்டே இருக்கின்றன என்கிறது தினமணி!.

DIna0106.gifஇந்த வேளை, "கிளிநொச்சியை இழந்தது பின்னடைவு அல்ல" என்று பேசிக்கொண்டிருக்கும் தருணமல்ல, எனவும் கூறி இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் தமிழக கட்சிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என தமிழக நாளேடு தினமணி, இன்று ஜனவரி 6ஆம் திகதி ஆசிரியத் தலையங்கம் எழுதியுள்ளது.

"தமிழினத்தை அழிக்கும் இலங்கை இராணுவத்துக்கு உதவும் மத்திய அரசை கண்டிக்கிறோம். போரில் விடுதலைப் புலிகள் பின்தங்கியிருப்பது ஒரு போர் தந்திரம்தான். நிச்சயம் அவர்கள் வெல்வார்கள். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்", என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வைகோ சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் தெரிவித்திருந்தார்.

தினமணி, ஆசிரியத் தலையங்கத்தில் தற்காலிக யுத்தம் நிறுத்தமொன்றினை மட்டுமே வலியுறித்திடினும், உடனடியாக செயல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தினை அது சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட தமிழக முயற்சிகளின் செயல் திறன் குறித்த கேள்விகளையும் தினமணி எழுப்பியுள்ளது.

"பேரரவம் கேட்டிலையோ..." என்ற தலைப்பிலான இவ் ஆசிரியத் தலையங்கம் முழுமையாக:

இலங்கை ராணுவம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ஒலித்த குரல்கள் ஓய்ந்துகொண்டே இருக்கின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ், பழ. நெடுமாறன் இருவருடைய குரல்கள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவையும் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் கூச்சலில் காணாமல் போய்விட்டன.

இந்த முரண் நியாயமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால், ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு திரட்டப்பட்ட நிதி, உதவிப்பொருள்கள் என்னவாயிற்று? தமிழக முதல்வருக்கு இலங்கை அதிபர் விடுத்த அழைப்பு என்ன ஆயிற்று? பதில் வராத கேள்விகள் நிறைய.

திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கைத் தமிழர் பிரச்னை ஒட்டுமொத்தமாக பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. தேர்தல் முடிவு வெளியாகும் வரை யாரும் கவலைப்படப் போவதில்லை. திருமங்கலத்தில் வெற்றி விழா கொண்டாடப்படும்போது ஒருவேளை, இலங்கை ராணுவமும் வெற்றிவிழா கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வளவு வேகமாக இலங்கை ராணுவம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

சுமார் ஒரு லட்சம் தமிழர்களை விடுதலைப் புலிகள் பலவந்தமாக முல்லைத் தீவுக்கு இடம் பெயரச் செய்துள்ளனர். கிளிநொச்சியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள், சில மாடுகள் தவிர மனித வாசமே இல்லை என்று இலங்கை ராணுவம் சொல்கிறது.

இலங்கை ராணுவம் முன்னேறிச் செல்லும் பாதைகளில் தமிழர்களே காணப்படவில்லை என்றால், நிவாரணப் பொருள்களை யாருக்கு அளிக்கிறது இலங்கை அரசு? புரியவில்லை. இந்த நிலையிலும்கூட, "தமிழர்களுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கும் உணவு போய்க்கொண்டிருக்கிறது'' என்கிறார் இலங்கை அதிபர் ராஜபக்ஷ. அதாவது சாப்பாடு போட்டு சண்டை போடுகிறோம் என்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கைவசம் இருந்த கிளிநொச்சி இலங்கை ராணுவத்தின் ஆளுகைக்கு வந்துவிட்டது. அடுத்து ஆனையிறவு பகுதியும் கைப்பற்றப்படும். முல்லைத் தீவை அடுத்த ஓரிரு வாரங்களில் கைப்பற்றி விடுவோம் என்று இலங்கை ராணுவம் நம்புகிறது.

முல்லைத் தீவு விடுதலைப் புலிகளின் கடைசி இடமாக இருக்கும். இங்கு நடைபெறும் போர் மிக மோசமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது முல்லைத்தீவில் இருக்கும் தமிழர்கள் கதி என்ன என்பதுதான் கேள்விக் குறியாக உள்ளது.

முல்லைத் தீவில் நடக்கவிருக்கும் போர் கண்மூடித்தனமாக, உலக நாடுகளின் விமர்சனங்கள் பற்றிய கவலைகள் இல்லாத போராகத்தான் இருக்கும். இலங்கை அரசு 25 ஆண்டுகளாக காட்டமுடியாத கோபத்தீயின் வெளிப்பாடாக அமையும்.

இஸ்ரேல் ராணுவம் காஸா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் நடத்தும் போரில் 87 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 517 பேர் இறந்துள்ளனர். 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது முல்லைத் தீவிலும் நடக்கும். விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இந்தப் போரில் தமிழர்கள் வெளியேற அனுமதிக்கப்படாவிட்டால் நிச்சயமாக பல ஆயிரம் தமிழர்கள் இந்தப் போரில் இறக்க நேரிடும்.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருந்தால், இப்போது முல்லைத் தீவில் உள்ள தமிழர்கள் வெளியேறும்வரை இலங்கை ராணுவம் தாக்குதலை நடத்தக்கூடாது என்று இந்திய அரசு மூலமாக நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் மனித அரணாகப் பயன்படுத்துகிறார்கள் என்று இலங்கை அரசு சொல்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு இடம்பெயர விடாமல் புலிகள் தடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வெளியேறும் தமிழர்கள் ராணுவத்துக்கு அஞ்சியே புலிகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், போர்க்களத்தில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறச் செய்வது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு இருவரின் கடமை.

இது நடைபெற வேண்டுமானால் குறிப்பிட்ட சில நாள்களுக்கு போர் நிறுத்தம் அவசியம். அதற்கான நிர்பந்தத்தை இந்திய அரசு மூலமாக ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.

"தனித் தமிழீழப் போர் வேறு வடிவம் கொள்ளும்" என்றும் "கிளிநொச்சியை இழந்தது பின்னடைவு அல்ல" என்றும் பேசிக்கொண்டிருக்க இது தருணமல்ல.

இந்த ஒரு லட்சம் தமிழர்களை இப்போது காப்பாற்றாவிட்டால் பிறகு எப்போதும் காப்பாற்ற முடியாது. அப்படியான நிலை ஏற்படும்போது, தமிழகத்தில் நடந்த உண்ணாவிரதம், கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், அதன் தீர்மானங்கள், பிரதமருடன் சந்திப்பு என அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

January 04, 2009

ஜனவரி 5: தமிழர் தம் விடிவுக்காய் தன்னுயிர் ஈந்த மாமனிதரின் 9ஆவது நினைவு தினம்

மிழர் தம் விடிவுக்காய் தன்னுயிர் ஈந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்.

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 9ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரருமாகிய திரு. அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வீரகேசரி பத்திரிகையில் எழுதியுள்ள நினைவுக் கட்டுரை:

லங்கைச் சரித்திரத்திலேயே ஒரு தமிழ்த் தலைவர் தமிழர்களுக்காக குரல் கொடுத்த காரணத்துக்காக சிங்களத் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். அவர் கொலை செய்யப்படும்போது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். மாபெரும் தலைவர், சட்ட வல்லுனர் மறைந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தின் மறைவின் பின் அவரது மைந்தரான இவர் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று எல்லோரும் மெச்சத்தக்க வகையில் நடத்தி வந்தார்.

KP0105.jpgஅப்போதைய அரசியல் சூழ்நிலைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியற் கோட்பாடுகளை ஏற்று இலங்கை வாழ் தமிழர்களது பிரச்சினைகளை திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு தீர்வைக் கொண்டு வருவதற்கு எல்லா வழிகளிலும் செயற்பட்ட இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாமத்தை உச்சரிக்கவே யாரும் அஞ்சித் தயங்குகின்ற வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதால் மட்டுமே தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட முடியும் என்ற யதார்த்தத்தை பகிரங்கமாக வெளிக் கொணர்ந்த பெருமை அமரர் குமார் பொன்னம்பலத்தையே சாரும்.

மேலும் தமிழர்களின் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதையும் இலங்கையிலும் சர்வதேசத்திலும் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அமரர் குமார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதால் ஆத்திரமும் துவேசமும் கொண்டிருந்த பலர் இவரைப் பார்த்து இவ்வளவு ஆதரவு இருப்பின் நீங்கள் ஏன் இன்னமும் அவர்களுடன் சேரவில்லை எனக் கேட்டபோது என்னுடைய பாசறை வேறு, அவர்களது பாசறை வேறு எனப் பதில் கூறியிருந்தார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையையும் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனித உ?மை மீறல்களையும் சர்வதேசத்திற்கு வெளிக்கொணர்ந்த பெருமையும் அமரர் குமார் பொன்னபலத்தையே சாரும். இதற்காக இலங்கை வாழ் தமிழர்கள் அவருக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவரது இந்தக் கொள்கைகளால் அவரைக் கைது செய்யும் நோக்குடன் சந்திரிகா அம்மையாரின் அரசு இரகசியப் பொலிஸாரை அவரது வீட்டுக்கு அனுப்பி பல மணி நேரம் விசாரணை செய்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றது.

சந்திரிகா அம்மையார் தென்னாபிரிக்காவில் வைத்து "தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்லர்'' எனப் பேட்டியளித்த சம்பவத்தைக் கண்டித்த ஒரே தமிழ்த் தலைவர் குமாரே ஆவார்.

அவர் படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சந்திரிகா அம்மையார் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகளை கடுமையாகத் தாக்கிப் பேசி "புலிகளுக்கு ஆதரவாக இயங்குபவர்கள் கொழும்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்'' என்ற கருத்தில் பேசியிருந்தார். மறுநாள் காலை குமார் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு இனியும் தான் நீண்ட காலம் வாழ்வது கடினமென என்னிடம் கூறியிருந்தார். அவரின் கொலைக்கு சந்திரிகா அரசே பொறுப்பேற்க வேண்டும்.

குமார் பொன்னம்பலம் அவர்களது கொலைச் சம்பவத்தை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரியான பந்துல விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையையும் கொலையோடு சம்பந்தப்பட்டவர்களின் விபரத்தையும் 2000ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளித்திருந்ததும் அவரால் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பல தடவைகள் நான் எனது கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தேன். தகுந்த அரசியல் தலைமையின்றி தமிழினம் அனாதையாக்கப்பட்டு படுமோசமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் அவ்விடத்தை நிரப்பக்கூடிய தலைமகன் குமார் பொன்னம்பலமாகவே இருந்தார்.

அதனையும் கருத்தில் கொண்டுதான் அவர் கொலை செய்யப்பட்டபோது அதியுயர் விருதான "மாமனிதர்' என்ற பட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் வழங்கிக் கௌரவித்தார்.

அவரைக் கொலை செய்தது யார் எனத் தெரிந்த பின்பும் அவரின் கொலைச் சம்பவத்தை விசாரித்த பொலிஸ் காவல் உத்தியோகத்தர்கள் கொலை செய்தவர்களை பாதுகாக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டார்கள். கொலை செய்தவர்களுக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஆற்றிய தொண்டுகளால் அவர்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இலங்கை அரசியல் சரித்திரம் எழுதும்போது ஜனநாயக கட்சி கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் உருவாவதற்கு இவர் ஆற்றிய சேவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஞ்ஞாபனத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தினேஷ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி., முஸ்லிம் காங்கிரஸ், பல்கலைக்கழக மாணவர் முன்னணி முதலிய பல கட்சிகளும் சேர்ந்து உருவாக்கின. அதில் அனைத்துக் கட்சியினரும் கையெழுத்திட்டனர். இதை சிறிமாவோ அம்மையார் கைவிட்டிருக்காவிட்டால் தமிழர்களது பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.1985ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரக் காலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்காக இலவசமாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தார். அவர் ஆற்றிய சேவை இதுவரை யாரும் ஆற்றியதில்லை. அவர் இறந்த போது களுத்துறைச் சிறைச்சாலையில் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டமை இதை நிரூபிக்கிறது.

அவர் மறைவதற்கு சற்று முன் தேர்தலை எதிர்நோக்கி தமிழ்ப் பகுதிகளில் போட்டியிடுவதற்கு ஒரு பட்டியலைத் தயாரித்திருந்தார். இதுவும் அவரது கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

அவரைப் போல இன்னொருவர் பிறக்கப் போவதில்லை. இவரது மூன்றாமாண்டு நினைவு மலரில் கவிதாஞ்சலி வழங்கியுள்ள மறைந்த தமிழறிஞர் க.சொக்கனவர்கள் "உள்ளும் புறத்தும் உற்றிடுபகைவர் பலராய் நின்ற போதிலுமஞ்சாச் சிங்கமாய் அவர்களின் சிறுமைகள் தன்னை உலகமறிய உரைத்ததில் குமாரிற்கு இணையாய்ச் சொல்ல எவருமே இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாமனிதர் அவர்கள் தன்னைப் பற்றிக் கூறும்போது, பின்வருமாறு கூறினார்.

"நீ உனது உயிரைப் பற்றிப் பயப்பட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். நீ வாயை மூடிக் கொண்டே வாழ வேண்டுமானால் அந்த வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன? நான் ஒரு அடிமையாக வாழ்ந்து இனத் துவேசிகளும் ஆட்சியில் உள்ளவர்களும் கூறுவனவற்றிற்கு தலையாட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர்கள் விரும்புவதை நான் ஏற்றுக் கொள்ள டியாமல் அவர்கள் கூறுவது எனது நம்பிக்கைக்கு எதிராக அமைந்தால் நான் ஏன் எனது மனச்சாட்சிக்கு எதிராக மௌனம் சாதிக்க வேண்டும்.''அவர் தான் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார் என்பதற்கு சுவர்ணவாஹினியில் பின்வருமாறு கூறினார்.

"தமிழர் அரசியல் நிலை என்ன என்பதை ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஆராய்ந்து பார்த்தேன். ஒரு புறம் பயங்கரமான சிங்கள அரசும், மறுபுறம் ஒரு சதமும் பெறுமதியற்ற தமிழ்க் குழுக்களும் பாராளுமன்றத்தில் இருக்கின்றன. அவர்கள் சிங்கள அரசுக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வந்தனர். எக்காரணத்தை முன்னிட்டு அவ்வாறு ஆதரிக்கிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு அறியுங்கள். அரசு அவர்களுக்கு பாதுகாப்பும் தனிப்பட்ட உதவிகளும் செய்கிறது.

இத்தகைய சூழலில் தமிழ் மக்களின் அபிலாஷையை முன்னெடுத்துச் செல்லும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளே என்று எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒரு புறம் போராடிக்கொண்டு மறு புறம் அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே நான் புலிகளை ஆத?க்கின்றேன்'' என்றார்.

நான் சட்டத் தொழில் ஆரம்பித்த காலம் முதல் குமார் இறக்கும் வரை அவருடன் சேர்ந்தே பணியாற்றி வந்தேன். ஒரே குடும்ப அங்கத்தவர்களைப் போல என்னுடன் பழகி வந்த குமார் பொன்னம்பலம் அவர்களின் மறைவிற்குப் பின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை நான் ஏற்று நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நானும் எனது கட்சியும் இவரது கொள்கையைத் தொடர்ந்தும் பின்பற்றுதல், அவரது ஆத்மாவுக்கு நாம் அளிக்கும் ஆறுதல் என்றே கருதுகிறேன்.

அல்லற்பட்ட தமிழினத்தின் அவலங்களைப் போக்கி அவர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்த ஆண்மகனின் குரல்வளை நசுக்கப்பட்டது. தமிழர்கள் ஒரு தலைவனை இழந்தனர்.

தமிழர்களுக்காக தன்னையே தியாகம் பண்ணி இந்தத் தரணியிலே அமரர் குமார் பொன்னம்பலம் செய்த தொண்டுகளெல்லாம் தமிழர் தம் சரித்திரத்தில் நிலைத்திருக்கும். மறைந்தும் மறையாத அமரர் புகழ் நீடு வாழி.

அவரது 9 ஆவது சிரார்த்த தினமாகிய இன்றைய நாளில் அவனியிலே தமிழர்களுக்கு இனிமேலாவது ஓர் ஆறுதல் கிட்ட வேண்டும். அதற்கு அமரர் குமார் பொன்னம்பலத்தின் ஆத்மா ஆசி வழங்கட்டும்.

ரைம்ஸ் ஓவ் இந்தியா: 'அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான தருணம் வந்துள்ளது'

மிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநக ரான கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை இலங்கை இரா ணுவத்தின் பெரும் வெற்றியொன்றாக அமையும். புலி கள் இந்நகரத்திலேயே தம்மால் கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகப் பகுதிகளைக் கொண்டிருந்தனர். ஒரு தசாப் தகாலத்திற்கும் அதிகமாக இந்நகரம் கொழும்பு அரசாங் கத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது. கிளி நொச்சி கைப்பற்றப்பட்டமையால் அப்பிராந்தியத்தில் புலிகளுக்கு தளமொன்று இல்லாதிருப்பதுடன் போரின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம். புலிகள் போரில் நிலைத்திருப்பதற்காக பெரும்பாலும் கெரில்லா போர் உத்திகளுக்குத் திரும்பக்கூடும். ஆனால் இப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்காக கொழும்பு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான தருணம் தற்போது கனிந்துள்ளது என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான ரைம்ஸ் ஓவ் இந்தியாவின் ஜனவரி 3ஆம் திகதிய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toi0103.jpg

இவ் ஆசிரிய தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சிறுபான்மை தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபி லாஷைகளை தீர்த்துவைப்பதற்கான அரசியல் தீர்வுப் பொதியொன்றை அமுல்படுத்துவதற்கு கொழும்பு, தமி ழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தோல் வியை எதிர்பார்த்திருந்தது. அதில் ராஜபக்ஷ அரசாங் கம் இனியும் தாமதிக்கக்கூடாது. புலிகள் இயக்கம் 1970களில் தமிழ் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துவதாகக் கூறி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இராணுவ அமைப்பொன்றாக அது மாற்ற மடைந்தது. மாற்றுக் கருத்துடையோரையும் விலகிச் சென்றவர்களையும் அடக்குவதற்காக புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் உலகெங்குமுள்ள பயங்கரவாத அமைப்புகளினால் பின்பற்றப்படும் வழிமுறைகளாகும்.

எவ்வாறெனினும் புலிகளின் அரசியல் இயல்பையும் தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் வேறுபடுத்துவது அவசியமானதாகும். அவர்களின் நியாயமான அபிலாஷைகள் பலாத்காரத்தினால் அடக்கப்பட்டுள்ளன. இப்போது புலிகள் பலவீனமடைந்த ஒரு சக்தியாக உள்ள நிலையில் கொழும்பு அரசியலமைப்பு சீர்திருத்தத்தங்களை ஆரம்பிப்பதுடன் அவற்றை அமுல்படுத்தவும் வேண்டும். இராணுவ வெற்றிகள் நிரந்தர சமாதானமாக மாற்றப்படுவதற்கு அரசியல் தீர்வொன்று அவசியமானதாகும். பல மாதங்களாக இலங்கை ஆயுதப்படைகளின் உக்கிரமான வான் தாக்குதலுக்கு முகம்கொடுத்த பொதுமக்களை வெற்றி கொள்வதென்பது இலகுவானதாக இருக்கப்போவதில்லை. அதற்கு நீண்ட காலம் எடுக்கும். ஆனால் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. மூன்று தசாப்த கால யுத்த்தினால் சீரழிந்த பிராந்தியத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச சமூகம் உதவக்கூடும். ஆனால் தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கு கொழும்பு தலைமை வகிக்க வேண்டியிருக்கும்.

பெரும்பான்மை சிங்கள சமூகத்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை நீக்குவதற்கு இலங்கை சிவில் சமூகமும் பங்காற்ற வேண்டியுள்ளது. புலிகளின் தோல்வி தமிழ் நாட்டிலும் தாக்கமொன்றை ஏற்படுத்தும். ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இலங்கை யுத்தத்தில் தலையிடாதிருப்பதில் இதுவரை கவனமாக இருந்துவந்தது. அதுவே சரியான கொள்கை. இந்த அரசாங்கம் இப்போது அரசியல் தீர்வொன்றுக்கான அவரச தேவை குறித்து கொழும்பை வலியுறுத்தும் அதேவேளை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் இலங்கைத் தமிழர்கள் மீதான அவர்களின் கரிசனகளையும் புலிகளின் அரசியல் இலக்குகளையும் வேறுபிரிப்பதிலும் செயலாற்றலாம்.

காணொளி: கலைஞர் டி.வி. யில் ஒளிபரப்பான இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடனான உரையாடல்

புத்தாண்டு தினத்தன்று கலைஞர் டி.வி. யில் ஒளிபரப்பான இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடனான உரையாடல்"

பகுதி 1:

பகுதி 2:

January 03, 2009

டெல்கி அதிகாரிகளுக்கு தமிழ் மக்களைவிட இலங்கை போர் வெறியர்கள்தான் முக்கியமானவர்களா?

OOR0103.jpg"டலுக்கு அப்பால் தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாமல் இங்குள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அடக்குமுறையைக் கையாளும் கொழும்பு அதிகாரிகளுடன் டெல்கியில் உள்ள சில அதிகாரிகள் கூட்டாகச் செயல்படுகின்றனர்" என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமருக்கு அவர் சனிக்கிழமை ஜனவரி 3ஆம் திகதி எழுதியுள்ள கடிதம்:

நிலைமை மோசம் அடைகிறது

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து நீங்களும், வெளியுறவுத்துறை மந்திரியும் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். என்றபோதிலும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் ஆயுதப் படைகள் நடத்திவரும் கொடுமைகளையும், அதன் விளைவாக முதல்-அமைச்சர் கருணாநிதி வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளபடி ஒவ்வொரு நொடியும் ஒரு தமிழன் உயிர் இழப்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மணிக்கு மணி நிலைமை மோசமடைந்து வருகிறது.

மனித உரிமை மீறல்

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாற்றப்பட்டு வருகிறது.

இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய `உடனடி ஆபத்து' நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையை, நிïயார்க்கில் இருந்து செயல்படும் இனப்படுகொலைத் தடுப்புத் திட்ட அமைப்பின் அறிக்கையில் சேர்த்திருப்பது, இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியாகியிருக்கும் கடும் கண்டனமாகும். நிலைமை மோசமாக இருந்தபோதிலும், இலங்கை அரசு கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு செயல்படாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

தலைவர்கள் சந்திப்பு

கடலுக்கு அப்பால், தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதை, ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட இந்தியத் தமிழர்களின் கவுரவத்தையும், சுய மரியாதையையும், கொழும்பில் உள்ள அடக்குமுறை அரசின் முகவர்களுடன் கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெல்கியில் உள்ள தப்பெண்ணம் படைத்த சில அதிகாரிகள் இனியும் காலில் போட்டு நசுக்க முடியாது. டெல்லியிடம் 'சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சிப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு அவர்களைக் குறுக்கிவிட முடியாது.

இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. டிசம்பர் 4-ந் தேதி பிரதமரைத் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசிய 2, 3 நாட்களுக்குள், இலங்கையின் போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகா திமிர்த்தனமாகப் பேசினார்: போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை ஒருபோதும் இந்திய அரசு வலியுறுத்தாது. தமிழ்நாட்டின் அரசியல் 'கோமாளிகள்' கூறுவதையும் அது செவிமடுக்காது'' என்றார்.

சட்ட சபை தீர்மானம்

முன்னதாக, மத்திய அரசு செயல்பட வலியுறுத்தி கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலர் ராவ்னி தாக்கூர் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று டெல்கியில் இருந்து கொழும்புக்குச் சென்றது.

மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதை செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டெல்கிக்கும், கொழும்புக்கும் இடையே சுமுக உடன்பாடு இல்லை என்றால் இவை நடந்திருக்காது.

அரசியல் தீர்வு

இலங்கை தொடர்பாக இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பிரதமரான நீங்களே கூறியிருக்கிறீர்கள்: "ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருக்கிறது'' என்று நாடாளுமன்றத்துக்கு அளித்த ஆண்டு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: 'போர்ப்படைத் தீர்வு' இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

இனப்படுகொலை

எனினும், இலங்கை அரசு வெறித்தனமாகப் பின்பற்றி வரும் 'போர்ப்படைத் தீர்வு'க்கு முடிவு கட்டுவதற்கும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக செய்திருக்கலாம்.

டெல்லியின் அக்கறையற்ற, உணர்ச்சியற்ற அணுகுமுறையையே இது காட்டுகிறது. ஏனெனில், 'இனப் படுகொலை வெறியாட்டத்தால்' பாதிக்கப்படுவோர், உதவிக்கும் குரல் கொடுப்பதற்கும் வழியற்ற தமிழர்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.

விடை தேவை

குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், பொதுவாக இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். டெல்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற கொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களைவிடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா? இந்த கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கவுரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதை இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

காலம் கடப்பதற்கு முன்பு எங்களுக்கு விடை தேவை. நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இவ்வாறு மருத்துவர் இராமதாஸ் கடிதத்தில் கூறியுள்ளார்.